கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் பராகுவே அணியை வீழ்த்தி அமெரிக்கா கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
‘ஏ’ பிரிவில் இன்று அதிகாலை நடந்த கடைசி ‘லீக்’போட்டியில் அமெரிக்கா– பராகுவே அணிகள் மோதின.
இதில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 27ஆவது நிமிடத்தில் அமெரிக்காவை சேர்ந்த டெம்சே கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் அமெரிக்கா கால் இறுதிக்கு தகுதிபெற்றது.
ரினொவ்ன் கழகத்தின் கனவு வீணானது; சம்பியனானது இராணுவக் கழகம்
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கொஸ்டரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. ஆனால் இந்த வெற்றியால் அந்த அணிக்கு எந்த பலனும் இல்லாமல் போனது.
‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா அணிகள் தலா 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் 6 புள்ளிகளுடன் கால்இறுதிக்கு முன்னேறின. கோல்கள் அடிப்படையில் அமெரிக்கா முதல் இடத்தையும், கொலம்பியா 2ஆவது இடத்தையும் பிடித்தன.
கொஸ்டரிக்கா ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தையும், பராகுவே 1 ஒரு சமநிலை , 2 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்து வெளியேற்றப்பட்டன.
நாளை நடைபெறும் போட்டியில் ஈக்வடார்–ஹைதி, பிரேசில்–பெரு அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்