மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க

2179
Image Courtesy- Cricket Mental

இந்தியாவின்  ஜெய்பூரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ஒருவருட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் குழாத்தில் இணைந்துள்ளார். மாலிங்கவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபாய்)  மும்பை அணி அவரை வாங்கியுள்ளது.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரின், அடுத்த பருவகால போட்டிகளுக்கான……

ஐ.பி.எல். தொடரின் அடுத்த பருவகாலத்துக்காக 20 வெளிநாட்டு வீரர்கள் உட்பட70 வீரர்களை தெரிவு செய்வதற்கான வீரர்கள் ஏலம், இன்று ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி சார்பில் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா உட்பட 28 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதிலிருந்து லசித் மாலிங்க மாத்திரமே அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் மும்பை அணியால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, கடந்த பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டதுடன், எந்த அணியும் அவரை தங்களது அணியில் இணைப்பதற்கு முன்வரவில்லை. மாலிங்கவின் தொடர் உபாதை மற்றும் அவரது பந்துவீச்சு பலம் குன்றியிருந்தமை என்ற காரணங்களால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. எவ்வாறாயினும், கடந்த பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மாலிங்க செயற்பட்டிருந்தார்.

எனினும், நீண்ட நாட்களுக்கு பின்னர் இலங்கை தேசிய அணியில் இணைந்த மாலிங்க, இவ்வருடம் சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். முக்கியமாக ஆசியக் கிண்ணத்தில் மாலிங்கவின் மீள்வருகை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவரின் பந்து வீச்சு என்பன அனைவரையும் ஈர்த்திருந்தது. அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தி வரும் மாலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதன் ஊடாக, விராட் கோஹ்லியை போன்று தொடர்ச்சியாக ஒரே அணியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை மாலிங்க பெற்றுள்ளார்.

புதுப்பொழிவுடன் IPL தொடரில் களமிறங்கவுள்ள டெல்லி அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கடந்த 11 வருடங்களாக தலைநகரான டெல்லியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும்……

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பல்வேறு வெற்றிகளை பெறுவதற்கு லசித் மாலிங்க முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இவர் மொத்தமாக ஐ.பி.எல் தொடரில் 110 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஐ.பி.எல். ஏலத்தை பொருத்தவரை, கடந்த முறை அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமுக சுழல் பந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்தி ஆகியோர்  இம்முறை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இருவரையும் முறையே ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் 8.4 கோடிகளுக்கு வாங்கியுள்ளன.

ஜெயதேவ் உனட்கட் கடந்த பருவகாலத்திலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நிலையில், அந்த அணி இம்முறை அவரை விடுவித்திருந்தது. எனினும் இன்று நடைபெற்ற ஏலத்தில் மீண்டும் அவரை அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. இதேவேளை தமிழ் நாட்டைச் சேர்ந்த வருன் சக்கரவர்த்தி முதல் முறையாக ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்தார் சிக்கர் தவான்

ஐ.பி.எல். (IPL) தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், முன்னாள்……

இவர்களுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் செம் கரனை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 7.2 கோடிக்கு வாங்கியுள்ளதுடன், கொலின் இங்ரம் 6.4 கோடிக்கு டெல்லி, கார்லோஸ் பிராத்வைட் (5 கோடி) , அக்ஷர் பட்லே் (5 கோடி), மொஹிட் சர்மா (5 கோடி) மற்றும்  சிவம் டுபே (5 கோடி) ஆகியோரை முறையே கொல்கத்தா, டெல்லி கெப்பிட்டல்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<