ஐ.பி.எல் ஏலத்தில் 1003 வீரர்கள் போட்டி; 28 இலங்கை வீரர்கள்

1203
Image courtesy - IPL Official page

ஐ.பி.எல் தொடரின் 12ஆவது பருவத்துக்கான வீரர்கள் ஏலத்தில் 70 இடங்களுக்கு 1003 வீரர்கள் போட்டியிடவுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் இலங்கையிலிருந்து 28 வீரர்கள் இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடர்களில் …

.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது அத்தியாயத்திற்கான வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகள் கடந்த மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

இதன்படி, .பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களையும், 20 வெளிநாட்டு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், இம்முறை ஏலத்தில் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த 59 வீரர்கள் போட்டியிடவுள்ளனர். இதில் அவுஸ்திரேலியா (35 பேர்), மேற்கிந்திய தீவுகள் (33 பேர்), இலங்கை (28 பேர்), ஆப்கானிஸ்தான் (27 பேர்), நியூசிலாந்து (17 பேர்), இங்கிலாந்து (14 பேர்), பங்களாதேஷ் (10), ஜிம்பாப்வே (5 பேர்) ஆகிய டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இம்முறை .பி.எல் ஏலத்தில் போட்டியிடவுள்ளனர்.

புதுப்பொழிவுடன் IPL தொடரில் களமிறங்கவுள்ள டெல்லி அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கடந்த ….

அத்துடன், அமெரிக்கா, ஹொங்கொங், அயர்லாந்து அணிகளிலிருந்து தலா ஒரு வீரர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதேபோல, 3 வீரர்கள் .சி.சியின் அங்கத்துவ நாடுகளிலிருந்து .பி.எல் ஏலத்தில் போட்டியிடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஒட்டுமொத்தமாக இடம்பெற்றுள்ள 800 அறிமுக வீரர்களில் 746 இந்தியர்கள் அடங்குவர். ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடும் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக .பி.எல். ஏலப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் இருந்து இறுதிப்பட்டியலை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு தசாப்தங்களாக .பி.எல் ஏலத்தை வழிநடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான ஹூக் எட்மிடெஸ் இம்முறை .பி.எல். ஏலத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<