மழையின் உதவியோடு மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி

1017
@ICC

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் வெற்றியை சுவீகரித்துக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண்சுப்பர் 6′ போட்டியின் முக்கியமாக ஆட்டத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்கொட்லாந்தை நேற்று (21) எதிர்கொண்டது. இதில் ஸ்கொட்லாந்து போட்டியில் வெல்ல 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும்போது 14.4 ஓவர்களில் 74 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்போது டக்வர்த் லுவிஸ் முறைப்படி ஸ்கொட்லாந்து 5 ஓட்டங்களால் பின்தங்கி இருந்ததால் பரிதாபமாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.  

ஒரு நாள் போட்டிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற நேபாள கிரிக்டெ் அணி

எதிர்வரும், 2019 ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட்..

ஹராரேயில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 198 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதிரடி வீரர் கிறிஸ் கெயில் போட்டியின் முதல் பந்துக்கே பூஜ்யத்திற்கு வெளியேறியதோடு, எவின் லுவிஸ் (66), மார்லன் சாமுவேல்சின் (51) அரைச் சதத்தின் உதவியோடு ஓரளவு கௌரவமான ஓட்டங்களை அவ்வணியினால் பெற முடிந்தது.

பதிலெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ரிச்சி பெரிங்டன் 33 ஓட்டங்களை பெற்றார். எனினும் அவர் LBW முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையாக இருந்தது. அந்தப் பந்து விக்கெட்டில் இருந்து விலகி லெக் திசையை நோக்கி செல்வது தொலைக்காட்சி ரிப்ளேயில் தெளிவான தெரிந்தது.

இது 1999, 2007 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்பொழுது நான்காவது தடவையாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேற எதிர்பார்த்த ஸ்கொட்லாந்துக்கு பாதகமாக அமைந்தது. ஸ்கொட்லாந்து 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.  

இதன்படி சுப்பர் 6 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் தனது 5 போட்டிகளில் 4இல் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்ததோடு வரும் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறும் இந்த தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் ஆடவும் தெரிவானது.  

மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ண போட்டிகளில் இரண்டு முறை சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால்..

இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் தனது அணியின் வாய்ப்பு மறுக்கப்பட்டதையிட்டு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ICC) மீது ஸ்கொட்லாந்து அணித்தலைவர் கைல் கொட்சியர் அதிருப்தி வெளியிட்டார்.  

’10 அணிகள் மாத்திரமே உலகக் கிண்ணத்திற்கு செல்லும் என்ற நிலை இருக்கக் கூடாது. அதனை புரிந்துகொள்ள முடியவில்லைஎன்று அவர் போட்டிக்கு பின்னர் குறிப்பிட்டார்.    

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 12ஆவது உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் அணிகள் 14இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்ட விடயம் ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதியிழந்ததை அடுத்து இணை அங்கத்துவ நாடு ஒன்று இன்றி உலகக் கிண்ண போட்டி நடைபெறுவது முதல்முறையாக அமையவுள்ளது.

அதேபோன்று கடந்த 2017 ஜுன் மாதத்தில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் அனைத்து டெஸ்ட் அணிகளும் விளையாடாத முதல் உலகக் கிண்ண போட்டியாகவும் இது அமையவுள்ளது.

அயர்லாந்து, ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் மற்றொரு தீர்க்கமான ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இன்று (22) மோதவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியம் ஏற்கனவே உலகக் கிண்ண வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவது ஆப்கான் மற்றும் அயர்லாந்து அணிகளின் உலகக் கிண்ண எதிர்பார்ப்பை நீடிப்பதாக இருக்கும்.

இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா

சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின்..

தற்போது சுப்பர் 6 புள்ளிப்பட்டியலில் 4 போட்டிகளில் 2 வென்று 5 புள்ளிகளுடன் இருக்கும் ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அது இரண்டாவது அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுவிடும். அந்த அணி தோல்வி அடைந்தாலும் போட்டி சமநிலை அல்லது முடிவின்றி நிறைவுற்றாலும் அயர்லாந்து, ஆப்கான் அணிகள் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.

சுப்பர் 6 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நாளை (23) மோதவுள்ளன.  

சுப்பர் 6′ புள்ளிப் பட்டியல்

அணி போட்டி வெற்றி தோல்வி சமன் புள்ளி
மேற்கிந்திய தீவுகள்   05   04   01 00  08
ஜிம்பாப்வே   04   02   01 01  05
ஸ்கொட்லாந்து   05   02   02 01  05
அயர்லாந்து   04   02   02 00  04
ஆப்கானிஸ்தான்   04   02   02 00  04
ஐக்கிய அரபு இராச்சியம்   04   00   04 00  00