சிங்கபூரை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இலங்கை!

Asian Netball Championship 2022

154

சிங்கபூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்று புதன்கிழமை (07) நடைபெற்ற போட்டியில் சிங்கபூர் அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

இரண்டாவது சுற்றின் குழு Eயிற்கான முதல் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, இன்றைய தினம் சிங்கபூரை 67 – 49  என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் அடுத்தச்சுற்றில் இலங்கை

போட்டியின் முதல் கால் பகுதியில் 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இரண்டாவது கால்பகுதியில் சிறப்பாக ஆடி 36-26 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது.

பின்னர் ஆரம்பித்த மூன்றாவது கால்பகுதியில் இலங்கை அணி மேலும் 16 புள்ளிகளை பெற்று 52-38 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப்பெற்றதுடன், இறுதி கால்பகுதியில் 15 புள்ளிகளை பெற்று 67-49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியினை பதிவுசெய்தது.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி குழுவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், அடுத்தப்போட்டியில் நாளை வியாழக்கிழமை (08) ஹொங் கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை குழு Eயிற்கான மற்றுமொரு போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த மலேசிய அணியானது, ஹொங் கொங் அணியை 56-46 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிகளின் முடிவுகள்

  • இலங்கை 67 – 49 சிங்கபூர்
  • மலேசியா 56 – 46 ஹொங் கொங்
  • மாலைத்தீவுகள் – தாய்லாந்து – போட்டி கைவிடப்பட்டது.
  • புரூனே 37 – 40 பிலிப்பைன்ஸ்
  • சீன தைபே 43 – 47 இந்தியா