ஒரு நாள் போட்டிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற நேபாள கிரிக்டெ் அணி

624
Afghanistan hand first defeat
@ICC

எதிர்வரும், 2019 ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடவிருக்கும் மேலதிக அணிகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்றைய நாளில் (15) இத்தொடரின் சுபர் சிக்ஸ் போட்டிகள் இரண்டும், பிளே ஒப் போட்டிகள் இரண்டும் நடைபெற்றிருந்தன.   

மேற்கிந்திய தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சுபர் சிக்ஸ்)

ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் போட்டியில், ஆப்கான் அணியினால் வீழ்த்தப்பட்ட பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் முதல் தோல்வியினை பதிவு செய்தது. இதேவேளை மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி ஒன்றினை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்த வெற்றி மூலம் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பினை உயிர்ப்பாக வைத்திருக்கின்றது.  

உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் ஆப்கானிடம் வீழ்ந்த உலக சம்பியன்

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, ஆப்கானின் சுழல் வீரர்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகளுக்கு சாய் ஹொப் மற்றும் மர்லோன் சாமூவேல் ஆகியோர் பெற்ற அரைச்சத இணைப்பாட்டமே ஆறுதலாக இருந்தது.

இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்போடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 197 ஓட்டங்களினைக் குவித்திருந்தது. ஆப்கானிஸ்தானின் சுழல் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பறிபோயிருந்த 8 விக்கெட்டுக்களில் 7 இணைக் கைப்பற்றியிருந்தனர்.  

தொடர்ந்து வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தமது ஆரம்ப வீரர்களை பறிகொடுத்த போதிலும் றஹ்மத் சாஹ் அரைச்சதம் ஒன்றினை விளாசியிருந்தார். சாஹ்வுக்கு மொஹமட் நபி, சமியுல்லா சென்வாரி ஆகியோர் பெறுமதி வாய்ந்த ஓட்டங்களுடன் வலுச்சேர்க்க அவ்வணி தொடர்ந்தும் இலக்கை நோக்கி முன்னேறியது.  

இப்படியானதொரு நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியினரும் விக்கெட்டுக்கள் வீழ்த்தி போட்டியினை த்ரில்லான கட்டமொன்றுக்கு எடுத்துச் சென்றிருந்தனர். எனினும், பின்வரிசையில் வந்த ஆப்கான் அணித்தலைவர் ராஷித் கான் அதிரடியான முறையில் ஆடி தனது தரப்பின் வெற்றியினை 48 ஆவது ஓவரில் உறுதிப் படுத்தினார்.

ஸ்கோர் விபரம்

மேற்கிந்திய தீவுகள் – 197/8 (50) சாய் ஹொப் 43, மார்லோன் சாமுவேல்ஸ் 36, முஜீப் சத்ரான் 3/33

ஆப்கானிஸ்தான் – 198/7 (47.4) ரஹ்மத் சாஹ் 68, மொஹமட் நபி 31, ஜேசன் ஹொல்டர் 3/39

முடிவு -ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்களால் வெற்றி  


ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஸ்கொட்லாந்து (சுபர் சிக்ஸ்)

புலவாயோ நகரில் இடம்பெற்றிருந்த இந்த ஆட்டத்தில் மெத்திவ் குரோஸ் பெற்றுக் கொண்ட சதத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தினை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து அணி உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் சுபர் சிக்ஸ் சுற்றினை வெற்றியுடன் ஆரம்பிக்கின்றது. மேலும், இந்த வெற்றிக்காக கிடைத்த 5 புள்ளிகளால் ஸ்கொட்லாந்து உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

பங்களாதேஷை எதிர்கொள்ள எமக்கு எந்த அழுத்தமும் இல்லை – ஹத்துருசிங்க

தற்பொழுது இடம்பெற்று வரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு..

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணிக்கு முன்வரிசை வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பினை வழங்க, வெறும் 114 பந்துகளுக்கு 135 ஓட்டங்களை விளாசிய குரோசிற்கு அணியை வலுப்படுத்துவது இலகுவாக இருந்தது. சிறப்பான துடுப்பாட்டத்தினை காட்டிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

சவால் நிறைந்த இலக்கினை எட்ட பதிலுக்கு ஆடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியினர் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தினை காண்பித்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இக்கட்டான நிலை ஒன்றினை சந்தித்திருந்தனர். இதனை தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சற்று முன்னேறிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மொஹமட் உஸ்மான் மற்றும் அஹமட் ரெஷா ஆகியோர் அரைச்சதம் தாண்டியிருந்த போதும் அவர்களால் இலக்கினை எட்ட முடியாது போயிருந்தது

ஸ்கோர் விபரம்

ஸ்கொட்லாந்து – 322/6 (50) மெத்திவ் குரோஸ் 114, கெலும் மெக்லோய்ட் 78, ரொஹான் முஸ்தபா 4/56

ஐக்கிய அரபு இராச்சியம் – 249 (47.4) மொஹமட் உஸ்மான் 80, அஹ்மட் ரெஷா 50, கிரிஸ் சோலே 68/4

முடிவு – ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றி  


பபுவா நியூ கினியா எதிர் நேபாளம் (பிளே ஒப்)

சுழல் வீரரான சந்தீப் லமிச்சானேவின் அபாரப் பந்துவீச்சும், திபேந்திர சிங் ஐரியின் சகலதுறை ஆட்டமும் காரணமாக நேபாள அணி 6 விக்கெட்டுக்களால் பபுவா நியூ கினியா அணியை பிளே ஒப் சுற்றின் போட்டியில் தோற்கடித்திருந்தது. அதோடு இந்த வெற்றியின் மூலமும் நடைபெற்று முடிந்த ஏனைய பிளே ஒப் போட்டியில் ஹொங்கோங் அணி நெதர்லாந்துடன் தோல்வியினை தழுவியதன் காரணமாகவும் வரலாற்றில் முதல் தடவையாக நேபாள அணி ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டது.  

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு…

ஹராரே நகரில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி முதல் துடுப்பாட்ட சந்தர்ப்பத்தினை பபுவா நியூ கினியா அணிக்கு வழங்கியது. ஆரம்பம் முதல் ஓட்டங்கள் சேர்க்க சிரமப்பட்ட பபுவா நியூ கினியா அணியினர் 114 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். நேபாள அணியின் பந்துவீச்சு சார்பாக சந்தீப் லமிச்சானே மற்றும் ஐரி ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இலகு வெற்றி இலக்கான 115 ஓட்டங்கள், ஐரியின் அரைச்சதத்தோடு 23 ஆவது ஓவரிலேயே பெறப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பபுவா நியூ கினியா – 114 (27.2) சார்ள்ஸ் அமினி 19, தீபெந்திர சிங் ஐரி 4/14, சந்தீப் லமிச்சானே 4/29

நேபாளம் – 115/4 (23) தீபெந்திர சிங் ஐரி 50*, ஆரிப் ஷேக் 26, நோமன் வனுரா

முடிவு – நேபாளம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி  


நெதர்லாந்து எதிர் ஹொங்கொங் (பிளே ஒப்)

ரொலிப் வன் டேர் மெர்வே வெளிப்படுத்திய சிறந்த பந்துவீச்சு காரணமாக நெதர்லாந்து அணி குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டிருந்த இந்தப் போட்டியில் ஹொங்கொங் அணியினை வீழ்த்தியிருந்தது. இதேவேளை ஆட்டத்தில் தோல்வியடைந்திருக்கும் ஹொங்கொங் அணி ஒரு நாள் போட்டிகளுக்கான தகுதியினை துரதிஷ்டவசமாக இழந்திருக்கின்றது.

வெக்வே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணியினர் நல்லதொரு துவக்கத்தினை காட்டியிருந்த போதிலும் அதனை நீடிக்கத் தவறியிருந்தனர். ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்த நெதர்லாந்து அணி இறுதியில் 174 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. நெதர்லாந்து அணிக்காக மெக்ஸ் டிஒவ்ட் அரைச்சதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த ஆட்டத்தில் ஹொங் கொங் அணிக்கு ஒரு நாள் போட்டிகளுக்கான அந்தஸ்தினை தக்கவைக்க 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு போதுமாக  இருந்த போதிலும் மோசமான துடுப்பாட்டம் காரணமாக அவர்களுக்கு 130 ஓட்டங்களினையே பெற முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து – 174 (48.2) மெக்ஸ் டி ஒவ்ட் 62, பீட்டர் போரன் 31, நதீம் அஹமட் 3/20

ஹொங்கொங் – 130 (43) பாபர் ஹயாட் 52, ரொலிப் வன் டேர் மெர்வ் 4/18

முடிவு – ஹொங்கொங் அணி 44 ஓட்டங்களால் வெற்றி