மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாமல் விளையாடிய மே. தீவுகள் வீரர்கள்

91
West Indies team

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  

கடந்த மாதம் (மார்ச்) ஆரம்பிக்க இருந்த .பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் முடிந்து உலக நாடுகள் சந்தித்துள்ள முடக்கம் மட்டுமின்றி, தடைப்பட்டுள்ள விளையாட்டு போட்டிகளும் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது? என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது

கொரோனாவுக்கு எதிராக உதவிக்கரம் நீட்டிய டில்ருவான் பெரேரா

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொவிட்-19 (கொரோனா) வைரஸிற்கு எதிராக உதவியவர்களின்

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடர்பாட்டால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாலும், இரத்து செய்யப்பட்டதாலும் விளையாட்டு அமைப்புகள் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன

குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் சபைகளுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.  

அத்துடன், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட கிரிக்கெட் சபைகள் தங்களது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வழங்கவும், அவற்றை ஒருசில மாதங்களுக்கு பிற்போடவும் நடவடிக்கை எடுத்துள்ளன

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் விளையாடிய அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் சம்பளம், இலங்கைக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் விளையாடிய தொடருக்கான சம்பளம் என எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.  

ஆதுமாத்திரிமின்றி, மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி வீராங்கனைகளுக்கும், உள்நாட்டு வீரர்களுக்கும் இவ்வாறு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதில் கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிருக்கான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீராங்கனைகளுக்கு இதுவரை போட்டி சம்பளம் வழங்கப்படவில்லை

எனவே, கிரிக்கெட் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்கும் மேற்கிந்திய தீவுகள், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.  

சுற்றுலா பாகிஸ்தான் – நெதர்லாந்து தொடர் ஒத்திவைப்பு

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் செயலாளர் வெய்ன் லூயிஸ், “2018ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களை நடத்தியதில் மட்டும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஷ்டம் ஏற்பட்டது.

குறித்த இரண்டு தொடர்களுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்கு சேர்த்தே ஒரு மில்லியன் டொலருக்கும் குறைவாகவே வருமானம் கிடைத்தது 

எனினும், வீரர்களுக்கான ஒப்பந்தக் கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் மாதாந்தம் செலுத்தப்படுகின்றது. ஆனாலும் பிராந்திய கழகங்களுக்கிடையிலான போட்டித் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு இதுவரை எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்காக துடுப்பு மட்டைகளை ஏலம் விடும் பங்களாதேஷ் வீரர்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக சகிப் அல் ஹசன்

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஜொன்னி கிரேவ் கருத்து வெளியிடுகையில்

“நாங்கள் மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறோம். இன்னும் பல வீரர்களுக்கான கொடுப்பனவு நிலுவையில் உள்ளது. விரைவில் அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க