எப்.ஏ கிண்ண அரையிறுதிக்கு செல்லும் முதல் அணியாக இராணுவப்படை

398
Army SC v SLTB SC – Quarter Final – Vantage FA Cup 2018

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழக அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணியினர் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகும் முதல் அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இதற்கு முன்னைய சுற்றில் இலங்கை இராணுவப்படை வீரர்கள் நியு ஸ்டார் அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், SLTB அணியினர் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக அணியை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றி கொண்டு, இன்று (17) சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற முதலாவது காலிறுதி மோலுக்கு தகுதி பெற்றது.

உருத்திரபுரம் அணியை பெனால்டியில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த SLTB

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம்…

இலங்கை இராணுவப்படை முதல் பதினொருவர்

பன்டார வரகாகொட (அணித் தலைவர்), மொஹமட் லுத்பி (கோல் காப்பாளர்), எரங்க பிரியஷான்த, மொஹமட் இஸ்ஸடீன், மதுஷான் டி சில்வா, ஜேசுராஜ் பேனார்ட், சன்கல்ப டயவன்ச, அசிகுர் ரஹ்மான், நிரோஷன் பதிரன, கசுன் பிரதீப், சுபாஷன பெர்னான்டோ

SLTB முதல் பதினொருவர்

M.A.S சுரங்க (அணித் தலைவர்), H.B.R ஷானக, K.P.M குமார, T.F நிசாம்டீன், R.M.V குமாரசிறி, S சன்ஜீவ், W.A.L தினர, W.A.P.N மதுசங்க, N.A மனுவெல், S.M.N.C செனவிரத்ன, J.R.P பெரேரா,  

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் இடம்பெற்ற பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் தன்னிடம் வந்த பந்தை இஸ்ஸடீன் கோலுக்குள் செலுத்த, கோலுக்கு அண்மையில் இருந்த பின்கள வீரர் மதுசங்க அதனை அங்கிருந்து வெளியேற்றினார்.

25 நிமிடங்கள் கடந்த நிலையில் நிரோஷன் பதிரன கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை கோல் காப்பாளர் சுரங்க தடுத்தார். இதன்போது கோல் காப்பாளர் கோலுக்கு அண்மையில் இல்லாத நிலையில் தன்னிடம் வந்த பந்தை மதுஷான் டி சில்வா கோலுக்கு வெளியே அடித்து சிறந்த வாய்ப்பை வீணடித்தார்.

30 ஆவது நிமிடத்தில் சுராஜ் பேனார்ட் வழங்கிய பந்தை முன்னணி வீரர் இஸ்ஸடீன் கோல் நோக்கி அடிக்க, பந்து வலது பக்க கம்பத்தில் பட்டு மீண்டும் மைானத்திற்குள் வந்தது. அதனை கசுன் பிரதீப் பெனால்டி எல்லைக்குள் இருந்து கோலுக்குள் செலுத்தி இராணுவப்படை அணியை முன்னிலைப்படுத்தினார்.

>> புகைப்படங்களைப் பார்வையிட <<

மேலும் 10 நிமிடங்களுக்குள் இராணுவ வீரர்களுக்கு அடுத்த சிறந்த வாய்ப்பும் கிடைத்தது. இஸ்ஸடீன் வழங்கிய பந்தை மதுஷான் பெற்று முன்னோக்கி எடுத்துச் சென்று மீண்டும் இஸ்ஸடீனிடம் வழங்க, அவர் அதனை கோல் நோக்கி ஹெடர் செய்கையில் பந்தை கோல் காப்பாளர் சுரங்க பிடித்தார்.

45ஆவது நிமிடத்தில் மதுஷான் டி சில்வா எதிரணியின் பேனால்டி எல்லைக்கு வெளியில் இடது புறத்தில் இருந்து கோல் நோக்கி அடித்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.

முதல் பாதி: SLTB வி.க 0 – 1 இராணுவப்படை வி.க

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில், மத்திய களத்தில் இருந்து பன்டார வரகாகொட உள்ளனுப்பிய பந்தை இஸ்ஸடீன் கோலுக்குள் செலுத்தினார். எனினும், அதனை ஓப் சைட் என நடுவர் சைகை காண்பித்தார்.

போட்டியின் 64ஆவது நிமிடத்தில் SLTB வீரர் சன்ஜீவ் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை லுத்பி பாய்ந்து பிடித்தார்.  

இரண்டாம் பாதியை ஆகிரோசமாக்கிய டிபெண்டர்ஸ், கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள்

பெத்தகான கால்பந்து மைதானத்தில்…

70 நிமிடங்கள் கடந்த நிலையில், இராணுவ வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது சன்கல்ப டயவன்ச உள்ளனுப்பிய பந்தை அணித் தலைவர் பன்டார வரகாகொட ஹெடர் செய்து கோலுக்குள் செலுத்தி அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

85 நிமிடங்கள் கடந்த நிலையில் SLTB அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை மாற்று வீரராக வந்த ஜயவீர கம்பங்களுக்கு வெளியால் உதைந்தார்.

மேலும் சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த கோணர் உதையின்போதும், ஜயவீர மேற்கொண்ட ஹெடர் முயந்சியை லுத்பி பாய்ந்து பிடித்தார்.

முழு நேரம்: SLTB வி.க 0 – 2 இராணுவப்படை வி.க

  • ThePapare.com இன் ஆட்ட நாயகன் – பன்டார வரகாகொட (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

இராணுவப்படை வி.க – கசுன் பிரதீப் 30′, பன்டார வரகாகொட  70′

மஞ்சள் அட்டை

SLTB வி.க – W.A.L தினர 15′, S சன்ஜீவ் 54′, D.S.A.D மதுமால் 63′, H.B.R ஷானக  82′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<