உருத்திரபுரம் அணியை பெனால்டியில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த SLTB

422

வான்டேஜ் எப். கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழகம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் யாழ்ப்பாணம்  துரையப்பா விளையாட்ரங்கில் இடம்பெற்றது.

உருத்திரபுரம் முதற்பதினொருவர் அணி

பிரதீஸ், கிரிசாந்தன், கிஷாந்தன்(அணித் தலைவர்),பௌசிகன், ஹரிசன், தேனுசன், கிருசிகன், குணேஷ்(கோல்காப்பாளர்), தனுசன்,விஜிதரன்,

SLTB முதற்பதினொருவர் அணி

ஷானக,குமார, நிஸாம்தீன், குமாரசிறி, சன்ஜீவ், தினார, மதுஷன்க, மனுவல், செனவிரத்ன, சுதேஷ் சுரங்க (அணித் தலைவர் & கோல்காப்பாளர்), பெரேரா

போட்டியின் ஆரம்பத்தில் இரு அணியினரும் தமது நேர்த்தியான ஆட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தடுமாறினர்.

காலிறுதியில் சௌண்டர்ஸ் கழகத்தை எதிர்கொள்ளவுள்ள சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்

வான்டேஜ் FA கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு….

உருத்திரபுரம் அணியினரின் அடுத்தடுத்த இரு முயற்சிகளின் தொடர்ச்சியாக, பெனால்டி எல்லைக்கு சற்று வெளியிலிருந்து பிரதீஸ் கோலினை நோக்கி உதைந்தார். எனினும், பந்து துரதிஷ்டவசமாக கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது.

இடது பக்கத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை ஷானக நேர்த்தியாக கோல் கம்பத்தினை நோக்கி செலுத்த, மதுஷன்க ஹெடர் மூலம் கோலாக மாற்றி போக்குவரத்து சபை அணியினை முன்னிலைப்படுத்தினார்.  

16ஆவது நிமிடத்தில் மதுஷன்க உள்ளனுப்பிய பந்தினை கிளிநொச்சி தரப்பினர் நேர்த்தியாக வெளியேற்றினர்.

தொடர்ந்தும் இரு அணியினரும் சம பலத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் எதனையும் சிறப்பாக நிறைவுசெய்ய முடியவில்லை.

43ஆவது நிமிடத்தில் SLTB அணியின் சஞ்சீவ் சிறந்த முறையில் பந்தினை கோலை நோக்கி எடுத்துச் சென்ற போதும் உருத்திரபபுரம் அணியின் பின்கள வீரர்கள் பந்தினை திசைதிருப்பினர்.  

முதலாவது பாதி: உருத்திரபுரம் வி. 0 – 1 SLTB வி.

தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் கோலினை நோக்கி பந்தினை எடுத்துச் சென்ற டினாற முன்னகர்ந்து வந்த கோல்காப்பாளரை கடந்து பந்தினை எடுத்துச்சென்ற போதும் பந்தினை கம்பத்திற்கு மேலால் உதைந்து சந்தர்ப்பத்தினை வீணாக்கினார்.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பமாகி 9ஆவது நிமிடத்தில் தேனுசனிற்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சாதகமாக நிறைவுசெய்ய தவறினார்.

வாய்ப்புக்கள் வீணாக சமநிலையில் நிறைவுற்ற சுபர் சன் – புளு ஸ்டார் மோதல்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக….

பந்தினை மறுபக்கத்திற்கு மாற்றிய SLTB வீரர்கள், பேரேராவிற்கு பந்தினை செலுத்தினர். துரதிஷ்டவசமாக பேரேரா உட் செலுத்திய பந்து கோல் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.


அடுத்த நிமிடத்திலேயே செனவிரத்னவிற்கு கிடைத்த சந்தர்ப்பமும் வீணடிக்கப்பட, பந்தினை மறுதிசைக்கு மாற்றிய கிளிநொச்சி தரப்பினர் பிரதீஸ் மூலமாக கோல் கணக்கினை சமப்படுத்தினர்.  

இரண்டாவது பாதியின் 18 ஆவது நிமிடத்தில் பெரேரா உட்செலுத்திய பந்தினை குணேஷ் வெளியேற்றினார்.

SLTB யின் கோல்பரப்பினை ஆக்கிரமித்த கிளியூரின் பிரதீஸ் இடது பக்ககத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை ஹரிசன் வலையுள் செலுத்த தவறினார்.

போட்டியின் இறுதி பதினைந்து நிமிட ஆட்டத்தின் போது உருத்திரபுர வீரர்கள்  தமது பாதியுள்ளிருந்து SLTB யின் கோல் முயற்சிகளை தடுத்து போட்டியினை சமநிலையில் நிறைவுசெய்தனர்.

முழு நேரம்: உருத்திரபுரம் வி. 1 – 1 SLTB வி.

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் கிளிநொச்சி வீரர்கள் மூன்று முயற்சிகளுள் ஒன்றினை மட்டுமே வலைக்குள் செலுத்தினர். அதேவேளை, SLTB அணியினர் 4 சந்தர்ப்பங்களையும் கோலாக மாற்றினர்.

பெனால்டி உதையில் 4 – 1 என்ற கோல் கணக்கில் SLTB அணி வெற்றிபெற்றது.

எப்.ஏ கிண்ண காலிறுதியில் மோதப்போகும் அணிகள்

வான்டேஜ் நிறுவனத்தின் அணுசரனையில் …

600இற்கு  மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய எப்.ஏ கிண்ண தொடரில் இறுதி 16 அணிகளுள் ஒன்றாக இடம்பிடித்த கிளியூரின் ஒரேயொரு அணியான உருத்திரபுரம் அணியின் இவ்வருட பயணம் நிறைவிற்கு வந்தது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற. SLTB விளையாட்டுக் கழகம் எதிர்வரும் 17ஆந் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள முதலாவது  காலிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன்கள் இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தினை  எதிர்த்து போட்டியிடவுள்ளது.  

Thepapare.comஇன் ஆட்டநாயகன்பெரேரா (SLTB வி.)

கோல் பெற்றவர்கள்

SLTB வி.க – மதுஷன்க 08′

உருத்திரபுரம் வி.க – பிரதீஸ் 60′

மஞ்சள் அட்டை

உருத்திரபுரம் வி.பிரதீஸ்37’, விஜிதரன் 66’, கிஷாந்தன் 81’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<