பந்துவீச்சில் பிரகாசித்த கயான் சிரிசோம: வெற்றியை நோக்கி பாணதுறை விளையாட்டுக் கழகம்

538
SLC Premier League 2016/17 Tier B

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் B மட்டத்திலான நான்கு போட்டிகள் இன்றைய தினம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல இளையோர் கழகம்

போட்டியின் இரண்டாம் நாளான இன்று, லங்கன் கிரிக்கெட் கழகம் பெற்ற 422 ஓட்டங்களுக்கு பதிலாக தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த குருநாகல இளையோர் கழகம் 79.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் குருநாகல இளையோர் கழகம் சார்பாக ஹஷான் பிரபாத் 76 ஓட்டங்களையும், அனுராதா ராஜபக்ச 40 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். எனினும், ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய சானக ருவன்சிரி 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரஜீவ வீரசிங்க மற்றும் நவீன் கவிகார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

லங்கன் கிரிக்கெட் கழகத்தைவிட169 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற குருநாகல இளையோர் கழகத்தினை மீண்டும் துடுப்பாடுமாறு லங்கன் கிரிக்கெட் கழகம் பணித்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய, குருநாகல இளையோர் கழகம் இன்றைய நாள் நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காக 23 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையிலுள்ளது. 7 விக்கெட்டுகளே கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 146 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கிறது.

பந்து வீச்சில் ரஜீவ வீரசிங்க மற்றும் நவீன் கவிகாரவு ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.  

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 422 (89.2) – சானக ருவன்சிறி 100, லக்ஷான் ரொட்ரிகோ 91, லால் குமார் 86, மதுரங்க சொய்சா 38, யஷான் சமரசிங்க 37, மிதுன் ஜயவிக்ரம 103/3, சரித் மாபடுன 104/2, சரித் பண்டார 52/2, ஹஷான் பிரபாத் 18/1

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 253 (79.1) –ஹஷான் பிரபாத் 76, அனுராதா ராஜபக்ச 40, ருவந்த ஏக்கநாயக்க 26, சானக ருவன்சிரி 59/4,  ரஜீவ வீரசிங்க 62/3, நவீன் கவிகார 81/3

குருநாகல இளையோர் கிரிக்கெட்  கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): (F/O) 23/3 (16) – ஹஷான் பிரபாத் 13*, ரஜீவ வீரசிங்க 11/1, நவீன் கவிகார 10/1


பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

167 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது நாளை ஆரம்பித்த இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தனது முதலாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய பொலிஸ் விளையாட்டு கழகம் முதல் 5 விக்கெட்டுகளையும் 61 ஓட்டங்களுக்கு இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது.

எனினும், ஆறாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சமித் டுஷாந்த மிகவும் அபாரமாக துடுப்பாடி 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக, 192 பந்துகளுக்கு 82 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவருடன் இணைந்து துடுப்பாடிய சுவஞ்சி மதனாயக்க 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை 31 ஓட்டங்களுக்கு லக்‌ஷான் பெர்னாண்டோவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இறுதியில் பொலிஸ் விளையாட்டு கழகம் 87.1 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சிறப்பாக பந்து வீசிய சொஹான் ரங்கிக்க 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அச்சிர எரங்க மற்றும் லக்ஷான் பெர்னாண்டோ தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

16 ஓட்டங்களால் பின்னிலை அடைந்த நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம் :

இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 168 (76.2) – புத்திக சந்தருவன் 43 *, ரொஸ்கோ தட்டில் 38, மஞ்சுல ஜயவர்தன 47/4

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 184 (87.1) – சமித் டுஷாந்த 82, சுவஞ்சி மதனாயக 31, சொஹான் ரங்கிக்க 36 /3, அச்சிர எரங்க 35/2, லக்ஷான் பெர்னாண்டோ 50/2

இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 5/1 (5) – ரங்க திசாநாயக்க 1*, லக்ஷான் பெர்னாண்டோ 1*, மஞ்சுல ஜயவர்தன 5/1


பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது முதல் இன்னிங்சுக்காக 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 143 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம 46 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமது இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பாணதுறை விளையாட்டு கழகம் 66 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இரண்டாவது இன்னிங்சுக்காக மிஷேன் சில்வா 57 ஓட்டங்களையும் அருன தர்மசேன 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் சார்பாக மதுர மதுஷங்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

432 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 10 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டினை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. பந்து வீச்சில் கயான் சிரிசோம 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 268 (54.2) – சாமர சில்வா 72, மிஷேன் சில்வா 70, ஹசந்த பெர்னாண்டோ 29, இஷான் அபேசேகர 78/4, டிலங்க ஆவர்ட் 47/3, அமித் எரந்த 62/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 125 (47.3) –டினுஷ்க மாலன் 56, சமீர சந்தமால் 34, புத்திக்க ஹசரங்க 10, கயான் சிரிசோம 46/8, சரித புத்திக்க 6/1

பாணதுறை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 288/8d (66) – மிஷேன் சில்வா 57 , அருண தர்மசேன 50, லசித் பெர்னாண்டோ 45, மதுர மதுஷங்க 46/3, டிலங்க ஆவர்ட் 82/2

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 10/2 (7) – கயான் சிறிசோம 3/2


இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

286 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகார சபை கழக அணி 93 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 400 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இலங்கை துறைமுக அதிகார சபை அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய இஷான் ரங்கன 109 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிர்ஷ்டமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

351 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார அணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 7 விக்கெட்டுகள் கையிருப்பில் மேலும் 181 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சானக கோமசாரு இரண்டாம் இன்னிங்சில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை பௌதீக கலாச்சார அணி (முதல் இன்னிங்ஸ்): 49 (22.2) – பஹாட் பாபர் 14, பத்தும் நிஸ்ஸங்க 11, சானக கோமசாரு 17/5, சமிகாற எதிரிசிங்க 8/4

இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் (முதல் இன்னிங்ஸ்): 400/8d (93) – இஷான் ரங்கன 109, ஹஷான் குணதிலக்க 67, ப்ரஷான் விக்கரமசிங்க 80, தில்ஷான் மென்டிஸ் 70/2, பஹாட் பாபர் 73/2

களுத்துறை பௌதீக கலாச்சார அணி (இரண்டாம் இன்னிங்ஸ்): 170/3 (57) – பத்தும் நிஸ்ஸங்க 83*, தமிந்து அஷான் 41, மனோஜ் தேஷப்பிரிய 29*

image