நிபுனின் சதத்துடன் புனித ஜோசப் கல்லூரி அணி வலுவான நிலையில்

248
U19 Schools Roundup - 31st of oct -

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான குழு ‘D’ இற்கான போட்டியில் புனித ஜோசப் கல்லூரி வலுவான நிலையில் உள்ளது.

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியுடனான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அற்புதமாக துடுப்பெடுத்தாடிய அவ்வணியின் நிபுன் சுமனசிங்க 189 பந்துகளில் 12 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 122 ஓட்டங்களை விளாச, புனித ஜோசப் கல்லூரி 8 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

நிபுன் சுமனசிங்கவிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய ஜெஹான் டேனியல் 63 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் மதுஷான் ரணதுங்க மற்றும் தனஞ்சய பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியினர், இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி 303/8d (77.2) – நிபுன் சுமனசிங்க 122, ஜெஹான் டேனியல் 63, திணித் ஜெயக்கொடி 46, மதுஷான் ரணதுங்க 2/54, தனஞ்சய பெரேரா 2/79

புனித ஜோசப் வாஸ் கல்லூரி 24/2 (15)