ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

Bangladesh Tour of Sri Lanka 2025

85
Bangladesh Tour of Sri Lanka 2025

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாத்தில் இறுதியாக கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய லிடன் டாஸ் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

>>பங்களாதேஷ் அணியின் ஆதிக்கத்தோடு முதல் டெஸ்ட் சமநிலை<<

சம்பியன்ஷ் கிண்ணத் தொடரையடுத்து மஹ்மதுல்லாஹ் மற்றும் முஷ்பிகூர் ரஹீம் ஆகியோர் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், இவர்களுக்கு பதிலாக லிடன் டாஸ் அனுபவ வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஓய்வுபெற்ற வீரர்களுடன் கடைசி ஒருநாள் தொடரில் விளையாடிய சௌமிய சர்கார், நசும் அஹ்மட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் நயீம், சமிம் ஹொஸைன், தன்வீர் இஸ்லாம் மற்றும் ஹஸன் மஹ்மூட் ஆகியோர் ஒருநாள் குழாத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்களாதேஷ் அணி புதிய தலைவரான மெஹிதி ஹாஸன் மிராஷின் கீழ் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

மெஹிதி ஹாஸன் மிராஷ் (தலைவர்), டன்ஷிட் ஹாஸன், பர்வீஷ் ஹொஸைன் எமோன், மொஹமட் நயீம், நஜ்முல் ஹொஸைன் செண்டோ, டவ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<