ஸாஹிராவை வீழ்த்தி ஜோசப்புடனான இறுதி மோதலில் றோயல்

232

அகில இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன.

கொழும்பு, சுகததாச அரங்கில் சனிக்கிழமை (29) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் றோயல் கல்லூரி, பாடசாலை கால்பந்து போட்டிகளில் பலம் கொண்ட கொழும்பு ஸாஹிரா கல்லூரியை பெனால்டியில் வென்றதோடு புனித ஜோசப் வீரர்கள், கிண்ணியா மத்திய கல்லூரியை 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வென்றனர்.  

ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்தி அரையிறுதிக்குள் சென்றது ஸாஹிரா

பிரிவு ஒன்றுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான 18…

கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர்  றோயல் கல்லூரி

காலிறுதியில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸாஹிரா கல்லூரி போட்டியின் ஆரம்பத்தில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் றோயல் கல்லூரி அதற்கு நிகராக சிறப்பாக ஆடியது.

முதல் பாதியில் றோயல் வீரர்கள் இரு ப்ரீ கிக்குடன் கோல் வாய்ப்புகளை நெருங்கியபோதும் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து நேராக கோல்காப்பளர் மொஹமட் ஷாகிரின் கைகளுக்கு சென்றது.

ஸாஹிரா வீரர் மொஹமட் மஷுத்துக்கு பெனால்டி எல்லைக்குள் பந்து கிடைத்தபோது அவர் அதனை வேகமாக உதைக்கு, றோயல் கோல்காப்பளர் மொஹமட் அஸாட் அதனை பாய்ந்து தடுத்தார். 23ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைட்டா இருந்தது.

இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக இருந்தது. எனினும், 49 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் மொஹமட் சாஜித் பந்தை எதிரணி பெனால்டி பெட்டிக்குள் கொண்டுசென்று கோலாக மாற்றினார்.  

எனினும், 66 ஆவது நிமிடத்தில் றோயல் கல்லூரியால் பதில் கோல் திருப்ப முடிந்தது. மொஹமட் நபீஸ் கோலை நோக்கி உதைத்த பந்தை ஸாஹிரா கோல்காப்பாளர் தடுத்தபோது திரும்பி வந்த பந்தை உஸ்மான் அஹமட் கோலாக மாற்றினார்.  

Photos: St. Joseph’s College v Kinniya Central College | Semi Final | U18 Division I (2018)

ThePapare.com | Waruna Lakmal | 30/12/2018 Editing and re-using…

இதனால் போட்டியின் முழு நேரம் முடிவில் 1-1 என சமநிலை பெற, பெனால்டி சூட் அவுட்டில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. றோயல் கோல்காப்பாளர் அஸாட் சிறப்பாக பந்தை வலைக்குள் செலுத்தியதோடு 3 அபார தடுப்புகளை செய்து அந்த அணிக்கு 4-3 என்று வெற்றியை தேடிக்கொடுத்தார்.

குறிப்பாக, ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் பயிற்சியாளர் மொஹமட் ரூமி, றோயல் கல்லூரியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று ஓர் ஆண்டுக்குள் தனது முன்னாள் அணியை தோற்கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புனித ஜோசப் கல்லூரி எதிர் கிண்ணியா மத்திய கல்லூரி

போட்டி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய புனித ஜோசப் கல்லூரிக்கு 4 ஆவது நிமிடத்தில் கோல் பெறும் வாய்ப்பு கிடைத்தது. காவிந்த ரூபசிங்க பரிமாற்றிய பந்தை பெற்ற ஷெனால் சன்தேஷ் அதனை வலைக்குள் செலுத்த தவறினார்.

எனினும் 8 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து சச்சின்த பெரேரா பரிமாற்றிய பந்தை சன்தேஷ் கச்சிதமாக கோலாக மாற்றினார். இதனைத் தொடர்ந்து புனித ஜோசப் கோல்காப்பாளர் தடுமாற்றம் கண்டபோது கிண்ணிய மாத்திய கல்லூரிக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.  

புனித ஜோசப் கல்லூரி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்துக்கொண்டு எதிரணிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் முதல் பாதி ஆட்டம் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது.

Photos: Zahira College v Royal College | Semi Final | U18 Division I (2018)

ThePapare.com | Waruna Lakmal | 30/12/2018 Editing and re-using…

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பதில் கோல் திருப்ப போராடிய கிண்ணிய மத்திய கல்லுரிக்கு மொஹமட் முஷாரப் பரிமாற்றிய பந்தை ரிப்கான் அஹமட் தலையால் முட்டிய நிலையில் கோல் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் சசிது ஜயசிங்க அதனைத் தடுத்தார்.

இந்நிலையில் கிண்ணியா மத்திய கல்லூரியின் எதிர்பார்ப்பை சிதறிடித்து புனித ஜோசப் இரண்டாவது கோலையும் புகுத்தியது. இதன்போது ஜொனதன் தோமஸ் பெற்றுக்கொடுத்த பந்தை பதும் கிம்ஹான் இலகுவாக கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 69 ஆவது நிமிடத்தில் மீண்டும் செயற்பட்ட சன்தேஷ் நீண்ட தூரத்தில் இருந்து பரிமாற்றப்பட்ட பந்தை கட்டுப்படுத்தி எதிரணி கோல் எல்லையை நோக்கி எடுத்துச் சென்று சிறப்பாக வலைக்குள் செலுத்தினார்.

தொடர்ந்து 74 ஆவது நிமிடத்தில் கிண்ணிய மாத்திய கல்லூரிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மொஹமட் பிர்னாஸ் உதைக்க அது கோலை நோக்கி சென்றபோது புனித ஜோசப் கல்லூரி கோல்காப்பாளர் பந்தை மேலால் தட்டிவிட்டார்.    

எவ்வாறாயினும் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து புனித ஜோசப் கல்லூரி சார்பில் என். லக்ஷிதன் மற்றொரு கோலை போட்டு அந்த அணி நான்கு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<