ஹிம்மாட் சிங்கின் சதத்தோடு இலங்கையை வீழ்த்திய இந்திய வளர்ந்து வரும் அணி

972

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினால் 4 விக்கெட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எட்டு நாடுகள் கிண்ணத்திற்காக மோதும் இந்த தொடரில் குழு A அணிகளில் ஒன்றாக காணப்படும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஏற்கனவே தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்த பின்னர் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது…

இந்நிலையில் குழு A இல் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய மற்றைய நாடான  இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (10) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சம்மு அஷான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி இலங்கையின் வளர்ந்து வரும் அணி  அவிஷ்க பெர்னாந்து மற்றும் தேசிய கிரிக்கெட் அணி வீரர் அசேல குணரத்ன ஆகியோர் பெற்றுக் கொண்ட அரைச்சதங்களின் உதவியோடு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 260 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாந்து 106 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களை குவிக்க அதிரடி ஆட்டம் காண்பித்த அசேல குணரத்ன 64 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை நின்று திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

Photos: Sri Lanka vs Oman – ACC Emerging Asia Cup 2018

ThePapare.com | Waruna Lakmal | 07/12/2018 Editing and re-using images…

இதேநேரம், இந்தியா வளர்ந்து  வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக சிவாம் ரவி 3 விக்கெட்டுக்களையும், பிரசாத் கிரிஷ்னா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை காட்டியது.

Photos : Sri Lanka vs India – ACC Emerging Asia Cup 2018

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய ருட்டுராஜ் கய்க்வாட் மற்றும் ஹிம்மாட் சிங் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்த அந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி  47.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 261 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில்  ஹிம்மாட் சிங் சதமொன்று விளாசி 140 பந்துகளில் 12 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்ய, ருட்டுராஜ் கய்க்வாட் அரைச்சதம் தாண்டி 67 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

நியுசிலாந்து மண்ணில் பிரகாசித்த குசல் மெண்டில்

நியுசிலாந்து பதினொருவர் மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில்…

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய போதிலும் அது வீணாகியிருந்தது.

இப்போட்டியோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் யாவும் நிறைவுக்கு வருகின்றன. அடுத்ததாக இடம்பெறவுள்ள இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை டிசம்பர் 13ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

இதேநேரம், அதே தினத்திலேயே நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியும் இறுதிப் போட்டிக்காக பலப்பரீட்சை நடாத்துகின்றன.

போட்டியின் சுருக்கம்









Title





Full Scorecard

Sri Lanka

260/7

(50 overs)

Result

India

261/6

(47.3 overs)

India won by 4 wickets

Sri Lanka’s Innings

Batting R B
Sandun Weerakkody lbw by J Yadav 22 21
Hasitha Boyagoda c J Yadav b P Krishna 6 14
Avishka Fernando c J Yadav b S Mavi 80 106
Shehan Jayasuriya b P Krishna 38 42
Kamindu Mendis lbw by S Mulani 12 22
Asela Gunarathne not out 67 64
Shammu Ashan c P Singh b S Mavi 0 6
Chamika Karunarathne c R Gaikwad b S Mavi 8 22
Shehan Madushanka not out 12 6
Extras
15 (lb 3, w 9, nb 3)
Total
260/7 (50 overs)
Fall of Wickets:
1-26 (H Boyagoda, 3.4 ov), 2-55 (S Weerakkody, 7.5 ov), 3-127 (S Jayasuriya, 22.5 ov), 4-155 (K Mendis, 29.5 ov), 5-192 (A Fernando, 37.6 ov), 6-194 (S Ashan, 39.5 ov), 7-228 (C Karunarathne, 47.2 ov)
Bowling O M R W E
Shivam Mavi 10 0 62 3 6.20
Prasidh Krishna 8 0 47 2 5.88
Jayant Yadav 10 0 40 1 4.00
Shams Mulani 9 0 42 1 4.67
Siddharth Desai 9 0 53 0 5.89
Nitish Rana 4 0 13 0 3.25

India’s Innings

Batting R B
Atharwa Taide lbw by A Fernando 0 1
Ruturaj Gaikwad st S Weerakkody b L Ambuldeniya 67 73
Nitish Rana c S Madushanka b A Fernando 13 18
Himmat Singh not out 126 140
Deepak Hooda c A Fernando b K Mendis 26 24
Prabhsimran Singh c A Fernando b K Mendis 3 6
Jayant Yadav c S Weerakkody b K Mendis 9 11
Shams Mulani not out 11 13
Extras
6 (w 5, nb 1)
Total
261/6 (47.3 overs)
Fall of Wickets:
1-0 (A Taide, 0.1 ov), 2-20 (N Rana, 4.4 ov), 3-168 (R Gaikwad, 30.3 ov), 4-209 (D Hooda, 38.4 ov), 5-221 (P Singh, 40.1 ov), 6-234 (J Yadav, 42.6 ov)
Bowling O M R W E
Asitha Fernando 7 2 20 2 2.86
Shehan Jayasuriya 3 0 21 0 7.00
Lasith Ambuldeniya 9 0 62 1 6.89
Asela Gunarathne 4.3 0 27 0 6.28
Shehan Madushanka 6 0 32 0 5.33
Kamindu Mendis 9 0 51 3 5.67
Chamika Karunarathne 3 0 17 0 5.67
Shammu Ashan 6 1 31 0 5.17







முடிவு – இந்தியா வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க