மைக்கல் கூஹ் T20 உலகக் கிண்ணத்தில் இனி நடுவர் இல்லை

119

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கிரிக்கெட் போட்டி நடுவரான மைக்கல் கூஹ், T20 உலகக் கிண்ணத்தின் எஞ்சியிருக்கும் போட்டிகளில் நடுவராக செயற்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மைக்கல் கூஹ், T20 உலகக் கிண்ணத்திற்காக விதிக்கப்பட்டிருந்த உயிர்ப்பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிலையில் அதற்காக ஆறு நாட்கள் தடைக்காலத்தினைப் (Suspension Period) இணைப் பெற்றிருந்தார். குறித்த தடைக்காலத்தினை அடுத்து மைக்கல் கூஹ் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மீண்டும் நடுவராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மனநிலையினைக் கருத்திற்கொண்டு, T20 உலகக் கிண்ணத்தில் இருந்து நடுவர் பதவியில் கடமையாற்றமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> உலகக் கிணத்தை உச்சத்தில் முடிக்க பெரேராவுக்கு நெருக்கடி

மைக்கல் கூஹ் முன்னதாக ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணப் போட்டியில் நடுவராக பணியாற்ற நியமிக்கப்பட்ட போதும், அவர் உயிர்ப்பாதுகாப்பு வலைக்காக (Bio-Bubble) போடப்பட்டிருந்த விதிமுறைகளை மீறியதனை அடுத்து குறித்த T20 உலகக் கிண்ணப் போட்டியில் நடுவராக கடமை புரிந்திருக்கவில்லை. அதோடு மைக்கல் கூஹ் தடைக்காலத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், மைக்கல் கூஹ் இல்லாத குறித்த போட்டியில் மைக்கல் கூஹ் இற்குப் பதிலாக மரைஸ் எரஸ்மஸ் நடுவராகப் பணிபுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<