ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து விளையாடவில்லை: வில்லியம்சன்

219
©Getty image

நாங்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடாதது தான் பாகிஸ்தானுடனான தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தவைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்தார். 

நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ……….

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (26) எட்ஜ்பெஸ்டனில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான்நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது

இதன்மூலம் நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இந்த தோல்வியினால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், புள்ளிகள் பட்டியலில் அந்த அணி இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை அந்த அணி பெற்றுக்கொள்ளும்

அத்துடன், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் சதம் கடந்தார். அதுவே, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. நியூசிலாந்து அணியின் நீஷம் போராடி 97 ஒட்டங்களை குவித்தது வீணானது.

இலங்கை வளர்ந்து வரும் அணி தென்னாபிரிக்கா பயணம்

முத்தரப்பு தொடர் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகள் …..

இந்த நிலையில், நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் போட்டியின் பின்னர் கருத்து தெரிவிக்கையில்

இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை நாங்கள் கண்டோம், ஆனால், பலமிக்க பாகிஸ்தான் அணிக்கெதிராக இன்று நாங்கள் மோசமாக விளையாடியிருந்தோம். அதேபோல, கடந்த போட்டியைவிட இந்த ஆடுகளமானது சற்று பௌண்சர் பந்துகளுக்கு சாதகத்தைக் கொடுத்து இருந்தது. இதனால், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்து வீசியிருந்தனர். எமக்கு ஓட்டங்களைக் குவிக்கவும் சற்று கடினமாக இருந்ததுஎன கூறினார்

அணி இக்கட்டான நிலையில் இருக்கையில் நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம் ஜோடி நிதானமாக ஆடி நியூசிலாந்தை இக்கட்டான நிலையில் இருந்த மீட்டமையை நினைவு படுத்திய வில்லியம்சன், 

”நீஷம் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி. அவர்களது இணைப்பாட்டத்தால் தான் நாங்கள் சற்று சவாலான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது” என்றார்

தமது திட்டங்கள் பலனளிக்கவில்லை என்று குறிப்பிட்ட அணித் தலைவர், ”உண்மையில் பாகிஸ்தானின் ஆரம்ப விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுடன் கைப்பற்றியதால் எமக்கு போட்டியொன்றைக் கொடுக்க முடியும் என நினைத்தோம். ஆனால் பாபர் அசாம் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோரது இணைப்பாட்டம் அருமையாக இருந்தது

கெயில் ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவில் மாற்றம்

தற்போது ….

எமது தரப்பில் சாண்ட்னர் நன்றாக பந்து வீசினார். ஆனால் அவரால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் போனது. உங்களுக்கு இதுபோன்ற மோசமான நாட்களை சந்திக்க நேரிடும்சில நேரங்களில் இந்த நாட்களில் இருப்பீர்கள். இவ்வாறான போட்டித் தொடரொன்றில் எல்லா ஆட்டங்களையும் இதுபோன்ற வடிவத்தில் வெல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனெனில் அனைத்து அணிகளும் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும்” என்றார்

இன்று சிறந்த கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்க்க முடிந்தது. அதேபோல, இனிவரும் போட்டிகளில் கிடைக்கின்ற ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து எமது வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

இந்த உலகக் கிண்ணம் தற்பொழுது போட்டியின் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நியூசிலாந்து அணி, 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும், ஜூலை 3ஆம் திகதி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<