இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் திட்டமிட்டப்படி நடக்கும் – SLC

145

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அங்கு இருந்து இலங்கை வருகின்ற விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இலங்கை வருவதற்கு அனுமதியளிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.

.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி எதிர்வரும், ஜனவரி 2ஆம் திகதி இலங்கை வரவுள்ளது

எனினும், இங்கிலாந்தில் தற்போது பரவி வருகின்ற கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபு பரவலினால் இந்தத் தொடர் நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஜனவரி 14ஆம் திகதி திட்டமிட்டபடி குறித்த தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

>> இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் ஜெக் கல்லிஸ்!

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா, AFP செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

“இங்கிலாந்து அணி இலங்கை வருவதற்கு முன்பும், இலங்கையை வந்தடைந்த பிறகும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அத்துடன், பத்து நாட்கள் உயிர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும், எமது மருத்துவ குழுவானது இங்கிலாந்து அணியின் மருத்துவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கையில் உள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அவர்கள் திருப்தியை வெளியிட்டிருந்தார்கள் “ என்று கூறினார்.

“மேலும், இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தனி விமானம் மூலம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள்என்றும் அவர் தெரிவித்தார்.

>> Video – “தென்னாபிரிக்க அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல” – திமுத் கருணாரத்ன!

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவர் தமிந்த அத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில்

“நாங்கள் தொடரை இடைநிறுத்த வேண்டும் என எண்ணவில்லை. அதற்காக கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்

இலங்கை வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் மூன்று நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், எதிர்மறையான (Negative) PCR  பரிசோதனைகள் கிடைக்கப் பெற்றால் வீரர்கள் அந்த மூன்று நாட்களின் பின்னர் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதியில் (ஆறு நாட்களுக்குப் பிறகு) ஒரு குழுவாகப் பயிற்சி பெறுவார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு தான் இலங்கை வீரர்களுடன் போட்டியில் சந்திப்பார்கள். எனவே குறித்த நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

>> புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சந்தேகம்

முன்னதாக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இருப்பினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி மாத்திரம் சிறப்பு விமானத்தில் வருவதனால் இலங்கையில் தரையிறங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<