மாலிங்கவின் கோரிக்கையினால் பிரியாவிடை போட்டியை கோரிய குலசேகர

6142

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்கவே தான் பிரியாவிடைப் போட்டியொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரியதாகவும், அதற்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தால் தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்தாகவும் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான நுவன் குலசேகர தெரிவித்தார்.   

பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் போட்டித் தொடரில் தனக்கு பிரியாவிடைப் போட்டியொன்றை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட்டிடம் நுவன் குலசேகர கோரிக்கை விடுத்திருந்தார்

குலசேகரவுக்கு பிரியாவிடையாக அமையவுள்ள பங்களாதேஷுடனான 3ஆவது ஒருநாள் போட்டி

பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள்……

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குலசேகர தனது ஓய்வின் முடிவை வெளியிட்டார்

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்

”நான் சுமார் 10 வருடங்களாக லசித் மாலிங்கவுடன் இணைந்து விளையாடி இலங்கை அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். நான் 2007 முதல் 2014 வரை .சி.சியினால் நடத்தப்பட்ட அனைத்து தொடர்களிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். அதில் 2 தடவைகள் 50 ஓவர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும், 3 டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் விளையாடி 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற
டி-20 உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியிலும் விளையாடியிருந்தேன்

அதேபோல, குறித்த போட்டித் தொடரில் நான் இலங்கை அணியின் உப தலைவராகவும் செயற்பட்டிருந்தேன். உண்மையில் எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக அதனைக் கருதுகிறேன்” என்றார்

இலங்கையின் கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் மாலிங்கவுக்கு துணையாக இருந்து வேகப் பந்துவீச்சு துறையைப் பலப்படுத்திய குலசேகர தனக்கு துணைபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

”என்னை இந்த இடத்துக்கு அழைத்து வருவதற்கு காரணமாக இருந்த அம்மா, அப்பா, மனைவி, மனைவியின் பெற்றோர், எனது இரண்டு சகோதரர்கள், குடும்பத்தார் மற்றும் நான் கல்வி கற்ற போது பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், எனது சந்தோஷத்திலும், துக்கத்திலும் இருந்த அனைத்து நண்பர்கள், நான் விளையாடிய போது இருந்த அனைத்து அணித் தலைவர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அன்பான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன்…..

அதேபோல, சம்பக்க ராமநாயக்கவுக்கும், அனுஷ சமரநாயக்கவுக்கும் இந்த நேரத்தில் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் தான் எனது திறமைகளை இனங்கண்டு கிரிக்கெட் அரங்கில் சாதனை படைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்”

ஆரம்பத்தில் நுகேகொட கிரிக்கெட் அகடமியில் விளையாடியிருந்த குலசேகர அதன்பிறகு என்.சி.சி கழகத்துக்காக வலைப் பந்துவீச்சாளராக இருந்தார். அதன்போது தான் அனுஷ சமரநாயக்க தனது திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்ததாகவும், அதனையடுத்து தான் காலி கிரிக்கெட் கழகத்தில் இணைந்ததாகவும் குலசேகர இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.   

பிரியாவிடைப் போட்டியொன்றை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினடம் கோரிக்கை விடுத்தது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நுவன் குலசேகர கருத்து வெளியிடுகையில்,

”லசித் மாலிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு அமையவே நான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் பங்களாதேஷ் அணியுடனான தொடரில் பிரியாவிடைப் போட்டியொன்றை வழங்குமாறு கடந்த வாரம் கோரிக்கை விடுத்தேன்

எனினும், நான் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறத் தான் தீர்மானித்திருந்தேன். எனவே, லசித்தின் வேண்டுகோளுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் தான் நான் இந்த கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் முன்வைத்தேன்

எனினும், அதற்கான வாய்ப்பு கிடைக்கிவில்லை. ஆனால், எனக்கு போட்டியொன்றைத் பெற்றுத்தராதது தொடர்பில் நான் கவலைப்படவில்லை” என்றார்

நுவன் குலசேகர கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பிறகு 2018 இல் நடைபெற்ற உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடியிருந்தார். எனினும் மாகாண அணிகளுக்கிடையிலான டி-20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தினால் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கே.சி மெல்பேர்ன் என்ற கழகத்துக்காக விளையாடியதாகக் குறிப்பிட்டார்

கடந்த ஏப்ரல் மாதம் தான் நான் இலங்கைக்கு வந்தேன். அந்தக் காலப்பகுதியில் தான் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணித் தேர்வும் நடைபெற்றது. அப்போது நான் அவுஸ்திரேலியாவில் இருந்த காரணத்தால் உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.

உண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று நான் என்ன செய்தேன் என்பதை இலங்கை கிரிக்கெட் நிறுவனமோ, தேர்வாளர்களோ அறிந்திருக்கவில்லை. ஆனால், அங்கு பணிபுரிந்த ஓருசில பேர் இதுபற்றி அறிந்து வைத்திருந்தார்கள்” என்றும் குலசேகர குறிப்பிட்டார்

Photos: Sri Lanka vs Bangladesh – Warm-up Game

ThePapare.com | Waruna Lakmal | 23/07/2019 Editing and re-using…..

அதேபோல, பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட உத்தேச குழாத்திலும் தனது பெயர் இடம்பெறவில்லை. எனவே, அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் எனது ஓய்வை நான் அறிவித்தேன் என தனது ஓய்வுக்கான காரணத்தைத் தெரிவித்தார்

”உண்மையில் இதுவொரு அற்புதமான பயணமாகும். அதேபோல, அனைத்து வீரர்களும் என்றாவது ஒருநாள் ஓய்வுபெற வேண்டும். எனவே தற்போது நான் ஓய்வுபெற வேண்டிய நேரமாகும். இந்த முடிவை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

எனக்கு கிடைத்த அனைத்து கௌரவமும் கிரிக்கெட்டின் விளையாட்டின் மூலம்தான். எனவே, எதிர்வரும் காலத்திலும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எனது பங்களிப்பு தேவைப்படுமாயின், எந்தவொரு மறுப்பும் இன்றி அதை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதேபோல மாவிங்கவுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதேநேரம், .சி.சியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 16 பேர் குழாம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான…..

”ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற முதல் இலங்கை வீரராக மாறியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, எதிர்வரும் காலங்களில் இன்னும் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள் .சி.சியின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்தார்

இதேவேளை, இலங்கை அணியின் தற்போதை நிலை குறித்து கருத்து வெளியிடுகையில், அதற்கு குறிப்பிட்டதொரு விடயத்தை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது

எனினும், நாங்கள் முன்நோக்கிச் செல்ல வேண்டுமாயின் எம்மிடம் திட்டமொன்று இருக்க வேண்டும். 2023 உலகக் கிண்ணத்திற்கு தற்போது முதல் திட்டமொன்றை மேற்கொண்டால் நிச்சயம் எம்மால் உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக வீரரொருவருக்கு அணியில் நிரந்தர இடமொன்றை வழங்க குறைந்தபட்சம் அவருக்கு 10 போட்டிகளையாவது வழங்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு வழங்கினால்தான் அவர்களது திறமைகளையும் எம்மால் இனங்காண முடியும் எனவும் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<