டயலொக் ஜனாதிபதிக் கிண்ணம் கடான அணி வசம்

139

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் 2017ஆம் ஆண்டுக்கான திறந்த பிரிவின் இறுதிப் போட்டியில் நாத்தான்டியா யுனைடட் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய கடான இணை விளையாட்டுக் கழக அணியினர் தொடர்ந்து இரண்டாவது முறையாக சம்பியன்களாக முடிசூடினர்.  

நாடு பூராகவும் இடம்பெற்ற இம்முறை போட்டித் தொடரின் அரையிறுதியில் நாத்தான்டியா யுனைடட் விளையாட்டுக் கழகம் பொறல்லஸ்கமுவ பலறெஸ் அணியையும், கடான இணை அணி தெபேகம ரன்தரு அணியையும் வீழ்த்தி இறுதி மோதலுக்கு தகுதி பெற்றிருந்தன.

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச்…

இந்நிலையில், சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் கடான இணை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே புள்ளிகளை தமது முன்னிலையுடன் கொண்டு சென்றனர். அதன் நிறைவில் அவ்வணியினர் முதல் செட்டை 25-21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டனர்.

இரண்டாவது செட்டின் முதல் 16 புள்ளிகள் வரை நாத்தான்டியா யுனைடட் வீரர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் இரு அணிகளது புள்ளிகளும் சமநிலையடையும் விதத்தில் ஆட்டம் சென்றது. எனினும் நிறைவில் நாத்தான்டியா யுனைடட் வீரர்கள் இந்த செட்டை 25-23 எனக் கைப்பற்றி ஆட்டத்தை சமப்படுத்தினர்.

ஆட்டத்தின் மூன்றாவது செட் அரங்கில் கூடியிருந்த ரசிகர்களை மிகவும் மகிழ்வூட்டிய ஒரு செட்டாகவே இருந்தது. இறுதிவரை மிகவும் விறுப்பாக சென்ற இந்த செட்டின் நிறைவில் 26-24 என யுனைடட் வீரர்கள் வெற்றி பெற்று 2-1 என முன்னிலையடைந்தனர்.

மூன்றாவது செட்டைப் போன்றே இரு அணி வீரர்களும் வெளிப்படுத்திய அபார ஆட்டத்தினால் நான்காம் செட்டும் கடுமையாகவே இருந்தது. இந்த செட்டில் தமது நுட்பங்களை சற்று மற்றி விளையாடிய கடான இணை அணியினர் 25-21 என வென்று மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தினர்.

இதன் காரணமாக வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான இறுதி செட் ஆட்டம்வரை போட்டி நீண்டது.

இம்முறை வெபர் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய மட்டக்களப்பு அணி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில்…

இறுதி செட்டின் ஆரம்பத்தில் நாத்தாண்டிய யுனைடட் வீரர்கள் முன்னிலை பெற்றாலும், பின்னர் கடான வீரர்களின் தடுப்புக்கள் மிகவும் சிறப்பான முறையில் இருந்தமையினால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான செட்டில் கடான இணை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று போட்டியை 5-2 என்ற செட் கணக்கில் தன்னகப்படுத்தியது.

போட்டியின் முடிவு – கடான இணை 3 – 2 நாத்தாண்டியா யுனைடட்

பெண்கள் பிரிவு

இத்தொடரின் பெண்களுக்கான திறந்த பிரிவின் இறுதிப் போட்டியில் கொஸ்வதிய விஜய விளையாட்டுக் கழகம் மற்றும் சியம்பலாகொட கபில விளையாட்டுக் கழகம் என்பன மோதின.

மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியின் 5 செட்களும் விளையாடப்பட்டதன் பின்னர் கொஸ்வதிய விஜய அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றி பெற்று மகளிர் பிரிவின் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

 மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு