இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி

2453

இலங்கைக்கு ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 6ம் திகதி முதல் 11ம் திகதிவரை கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேற்கிந்திய தீவுகள் முன்னாள் நட்சத்திர வீரருக்கு ICC தடை

அதனைத்தொடர்ந்து T20i போட்டிகள் அனைத்தும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிகள் ஜனவரி 14ம் திகதி முதல் 18ம் திகதிவரை நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 6 – பல்லேகலை
  • 2வது ஒருநாள் போட்டி – ஜனவரி 8 – பல்லேகலை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 11 – பல்லேகலை

T20i தொடர்

  • முதல் T20i – ஜனவரி 14 – தம்புள்ள
  • 2வது T20i – ஜனவரி 16 – தம்புள்ள
  • 3வது T20i – ஜனவரி 18 – தம்புள்ள

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<