கவிந்து எதிரிவீரவின் சதத்தின் உதவியால் மஹிந்த கல்லூரி வலுவான நிலையில்

107

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லும்பினி கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய லும்பினி கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 47.5 ஓவர்களில்  சகல  விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. லும்பினி கல்லூரி சார்பாக வினு ஹேமால் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

புனித தோமியர் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் லஹிரு தில்ஷான் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் தருஷ கவிந்த 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ஹருஷ கவிந்த 31 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 155 (47.5) – வினு ஹேமால் 28, லஹிரு தில்ஷான் 4/20, தருஷ கவிந்த 3/10

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 127/7 (49) – ஹருஷ கவிந்த 31


புனித ஜோசப் கல்லூரி, மருதானை எதிர் மஹிந்த கல்லூரி, காலி  

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

மஹிந்த கல்லூரி சார்பில் கவிந்து எதிரிவீர 101 ஓட்டங்களையும், ஹேஷான் கவிந்த 76 ஓட்டங்களையும் நவோத் பரணவிதான 42 ஓட்டங்களையும் கேஷான் கவிந்த 41 ஓட்டங்களையும்.

ஜோசப் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் துமித் வேல்லாலகே 77 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் அஷேன் டேனியல் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி பாகிஸ்தானை T-20 தொடரில் எப்படி சமாளிக்கும்?

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜோசப் கல்லூரி சார்பில் ரெவான் கெல்லி ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார். பந்து வீச்சில் நிபுன் மலிங்க 1 ஓட்டத்திற்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 280/9d (91) –  கவிந்து எதிரிவீர 101, ஹேஷான் கவிந்த 76, நவோத் பரணவிதான 42, கேஷான் கவிந்த 41, ஹன்சில வேலஹிந்த 21, துமித் வேல்லாலகே 5/77, அஷேன் டேனியல் 2/64

புனித ஜோசப் கல்லூரி, மருதானை (முதலாவது இன்னிங்ஸ்)  – 31/3 (10) – ரெவான் கெல்லி 22*,  நிபுன் மலிங்க 3/01


தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா    

கடுநேரிய செபஸ்டியன் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பண்டாரநாயக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தர்ஸ்டன் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

தர்ஸ்டன் கல்லூரி சார்பாக சவான் பிரபாத் ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களைப் பெற்றார். பண்டாரநாயக கல்லூரி சார்பாக பந்து வீச்சில் ஜனிந்து ஜயவர்தன 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சிசித மதநாயக்க 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பண்டாரநாயக கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 187 (58) – சவான் பிரபாத் 76*. ஜனிந்து ஜயவர்தன 3/64, சிசித மதநாயக்க 2/13

பண்டாரநாயக கல்லூரி, கம்பஹா (முதலாவது இன்னிங்ஸ்) – 22/3 (12)


குருகுல கல்லூரி, களனி எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு  

நாலந்த கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை குருகுல கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய குருகுல கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது. குருகுல கல்லூரி சார்பில் மலிந்து விதுரங்க 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் நாலந்த கல்லூரி சார்பில் சமிந்து விஜேசிங்ஹ 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ரவீன் டி சில்வா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நாலந்த கல்லூரி சார்பில் லக்சித ரசஞ்சன ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார். பந்து வீச்சில் லசிந்து அயோஷ 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.     

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 93 (34.1) – மலிந்து விதுரங்க 20, சமிந்து விஜேசிங்ஹ 2/21, ரவீன் டி சில்வா 3/17

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 54/3 (15) – லக்சித ரசஞ்சன 27*, லசிந்து அயோஷ 2/08


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை   

மெசனொட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மெசனொட் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 51 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  

புனித பேதுரு கல்லூரி சார்பாக சந்தூஷ் குணதிலக ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளதுடன் தினேத் அஞ்சுல 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில்  நதுன் டில்ஷான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 139/5 (51) – சந்தூஷ் குணதிலக 81*, தினேத் அஞ்சுல 24, நதுன் டில்ஷான் 2/20