ரிச்மண்ட் கல்லூரிக்கு முதல் இனிங்ஸ் வெற்றி

236
U19 Schools Cricket 20th Oct

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் ரோயல் கல்லூரியுடனான போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இன்று ஆரம்பமான ஆனந்த கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் நிறைவில், மலியதேவ கல்லூரி முன்னிலையில் உள்ளது.

ரிச்மண்ட் கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரிச்மண்ட் கல்லூரி இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. முதல் நாள் மழை குறுக்கிட்டதன் காரணமாக 42.2 ஓவர்களே வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 70 ஓட்டங்களையும், தனஞ்சய லக்ஷான் 61 ஓட்டங்களையும் குவிக்க, ரிச்மண்ட் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்துவீச்சில் சாமிக எதிரிசிங்க 4 விக்கெட்டுகளையும் கனித் சந்தீப 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ரோயல் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவ்வணி 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சாமிக எதிரிசிங்க அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் சந்துன் மெண்டிஸ் மற்றும் ரவிஷ்க விஜேசிறி தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். 147 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட ரிச்மண்ட் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய ரோயல் கல்லூரி தோல்வியைத் தவிர்த்துக் கொள்ள போராடியது. ரிச்மண்ட் கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், ரோயல் கல்லூரியானது போட்டி நிறைவடையும் போது 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பிக்கொண்டது.

அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஹிமேஷ் ரத்நாயக்க 36 ஓட்டங்களையும் கவிந்து மதரசிங்க 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ரிச்மண்ட் கல்லூரி சார்பில் திலங்க உதேஷான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 266/9d (60.5) – கமிந்து மெண்டிஸ் 70, தனஞ்சய லக்ஷான் 61, அவிந்து தீக்ஷண 34, சாமிக ஹேவகே 33, ஆதித்ய சிறிவர்தன 33, சாமிக எதிரிசிங்க 4/62, கனித் சந்தீப 3/70

ரோயல் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 119 (39.3) – சாமிக எதிரிசிங்க 24, கோதம விஸ்வஜித் 22, கவிந்து மதரசிங்க 20, ரவிஷ்க விஜேசிறி 3/15, சந்துன் மெண்டிஸ் 3/32

ரோயல் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 147/8 (38) – ஹிமேஷ் ரத்நாயக்க 36, கவிந்து மதரசிங்க 30, கனித் சந்தீப 28, திலங்க உதேஷான் 3/22

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ரிச்மண்ட் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி.


ஆனந்த கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனியொருவராக போராடிய கவிஷ்க அஞ்சுல 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மலியதேவ கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் அசத்திய சஜீவன் பிரியதர்ஷன (5/59) மற்றும் தமித சில்வா (4/50) தமக்கிடையே 9 விக்கெட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய மலியதேவ கல்லூரி, முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துலாஜ் ரணதுங்க ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார். திலீப ஜயலத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி – 158 (48.2) – கவிஷ்க அஞ்சுல 67, லஹிரு ஹிரண்ய 27*, சஜீவன் பிரியதர்ஷன 5/59, தமித சில்வா 4/50

மலியதேவ கல்லூரி – 152/5 (51) – துலாஜ் ரணதுங்க 51*, சுபுன் சுமனரத்ன 34, தனஞ்சய  பிரேமரத்ன 36, திலீப ஜயலத் 3/22

Crawler