ஆனந்த மற்றும் இசிபதன கல்லூரி அணிகளுக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

310
Schools Cricket

19 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கர்கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டிகளில் ஆனந்த கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

இதேவேளை, அநுராதபுரம் மத்திய கல்லூரி மற்றும் புனித அலோசியஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் நிறைவில் புனித அலோசியஸ் கல்லூரி அணி வலுவான நிலையில் உள்ளது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை எதிர்த்து ஆனந்த கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களை பெற்றிருந்த ஆனந்த கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதற்கு மேலும் 125 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இன்றைய தினம் களமிறங்கியது.

அவ்வணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய கவிஷ்க அஞ்சுல 144 ஓட்டங்களை குவிக்க, ஆனந்த கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அணித்தலைவர் சம்மு அஷான் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அசத்திய கௌஷால் நாணயக்கார 63 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, போட்டி நிறைவடையும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக சனோஜ் தர்ஷிக (67) மற்றும் பிரின்ஸ் பெர்னாண்டோ (52) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். பந்து வீச்சில் திலீப ஜயலத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் டிலங்க மதுரங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் சுபுன் வராகொட மற்றும் அச்சில இரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 198 (53.2)டிலங்க மதுரங்க 67, விஷ்வ சதுரங்க 26, அச்சில இரங்க 4/19, சுபுன் வராகொட 4/20

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –309/9d (78)கவிஷ்க அஞ்சுல 144, சம்மு அஷான் 57, துஷான் ஹெட்டிகே 34, கௌஷால் நாணயக்கார 6/63

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184/6 (37.4)சனோஜ் தர்ஷிக 67, பிரின்ஸ் பெர்னாண்டோ 52, திலீப ஜயலத் 3/53

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


இசிபதன கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

குழு ‘B’ இற்கான மற்றுமொரு போட்டியில் இசிபதன கல்லூரியும் புனித பெனடிக்ட் கல்லூரியும் மோதிக் கொண்டன. போட்டியின் முதல் நாள் நிறைவில் 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய புனித பெனடிக்ட் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 137 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

கீழ்வரிசை வீரர்களும் பெரிதாக சோபிக்காத நிலையில், புனித பெனடிக்ட் கல்லூரி 66.5 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கே சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய லஹிரு டில்ஷான் 27 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய இசிபதன கல்லூரி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துரிதமாக துடுப்பெடுத்தாடிய சஞ்சுல பண்டார ஆட்டமிழக்காது 74 ஓட்டங்கள் விளாச, இசிபதன கல்லூரி 23 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து  151 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பெதும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

233 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி, போட்டி நிறைவடையும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அற்புதமாக துடுப்பெடுத்தாடிய பெதும் நிஸ்ஸங்க 101 ஓட்டங்களையும் ஹேஷான் பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் அசத்திய கவீஷ ஜயதிலக்க 26 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 208 (53.2)பெதும் நிஸ்ஸங்க 101, ஹேஷான் பெர்னாண்டோ 74, கவீஷ ஜயதிலக்க 5/26, ரிஷான் கவிஷ்க 2/46, மஹேஷ் தீக்ஷண 2/56

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –127 (66.5)சமிந்த விஜேசிங்க 28, கவீஷ ஜயதிலக்க 27, லஹிரு டில்ஷான்  5/27, சஞ்சுல பண்டார 2/19

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 151/3d (23)சஞ்சுல பண்டார 74*, பெதும் நிஸ்ஸங்க 42

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129/4 (32) – டிலான் சதுரங்க 32, ஷானில்க நிர்மால் 28, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/25, மதுஷிக்க சந்தருவன் 2/27

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இசிபதன கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


புனித அலோசியஸ் கல்லூரி எதிர் அநுராதபுரம் மத்திய கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் புனித அலோசியஸ் கல்லூரியும் அநுராதபுரம் மத்திய கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித அலோசியஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அநுராதபுரம் மத்திய கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. லஹிரு லியனகே அதிபட்சமாக 54 ஓட்டங்களையும், ஹேஷான் சேனார 43 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் அசத்திய ஹரீன் வீரசிங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களை பெற்றிருந்தது. அஷென் பண்டார ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

நுராதபுரம் மத்திய கல்லூரி – 186 (69.1)லஹிரு லியனகே 54, ஹேஷான் சேனார 43, ஹரீன் வீரசிங்க 6/70, நிதுக மல்சித் 3/24

புனித அலோசியஸ் கல்லூரி – 91/2 (36)அஷென் பண்டார 32*

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்குsinger-mca-premier-league-tournament