பெங்களூர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்

271
espn

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தலைமையில் விளையாடி வரும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக, அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கெரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இந்திய

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாளர் வீரரும், 2014ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்ட நியூஸிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் விட்டோரிக்குப் பதிலாக கெரி கிரிஸ்டன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுள்ளார்.   

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான கெரி கிரிஸ்டன், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இவ்வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கெரி கிரிஸ்டனின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பு மற்றும் அவரது பயிற்றுவிப்பு பின்புலம் என்பவை சிறந்த பெறுபேற்றைக் கொண்டுள்ளதால், பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கெரி கிரிஸ்டன் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக 2008ஆம் ஆண்டு முதல் 2011வரை செயற்பட்டிருந்தார். இந்த காலப்பகுதியில் 2011ஆம் உலகக் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்ததுடன், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியிருந்தது. இதன் பின்னர் தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு, அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முன்னேறச் செய்திருந்தார்.

ThePapare weekly sports roundup Episode 43

Uploaded by ThePapare.com on 2018-08-31.

இதேவேளை கிரிஸ்டன் ஐ.பி.எல். 2014 மற்றும் 2015ஆம் பருவகாலங்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்றுவித்துள்ளார். குறித்த இரண்டு தடவைகளும் டெல்லி அணி சிறிய முன்னேற்றத்தை கண்டிருந்தது. அத்துடன் இவர் அவுஸ்திரேலிய பிக்பேஷ் லீக்கில் ஹொபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு 2017ஆம் ஆண்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

கிரிஸ்டனின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி குறித்து கருத்து வெளியிட்ட பெங்களூர் அணியின் நிர்வாக தலைவர் சஞ்சீவ் சுரிவலா,

“ஐ.பி.எல். தொடரின் இறுதி பருவகாலத்தில் கெரி கிரிஸ்டன் அணிக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இதனால், அவரால் இம்முறை அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம்  நம்புகிறது” என்றார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கிரிஸ் கெயில், விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் மற்றும் மிச்சல் ஸ்டார்க் போன்ற முன்னணி வீரர்களை கொண்டிருந்தும், கடந்த 11 வருடங்களாக சம்பியன் கிண்ணத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க