நாலந்த மற்றும் செபஸ்தியன் கல்லூரிகள் காலிறுதியில்

144

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் டிவிஷன் 1 பாடசாலைகளுக்கிடையிலான தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன்  2 போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்தன.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற D.S. சேனநாயக கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு வழங்கியது.

இதன்படி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆனந்த மற்றும் திரித்துவக் கல்லூரிகள்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் D.S. சேனநாயக கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 342 (72.2) – விஷ்வ சதுரங்க 100, தேவக பீரிஸ் 47, பிரின்ஸ் பெர்னாண்டோ 45, சசிந்த ஹெட்டிகே 3/90, தசுன் பெரேரா 2/31

D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 56/6 (20) – சவிந்து பீரிஸ் 3/06, கௌமல் நாணயக்கார 3/22


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாநாம கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 364/5 (93) – பவன் ரத்னாயக 107*, ஹேஷான் ஹெட்டியாராச்சி 104*, கனிஷ்க ஜயசேகர 2/74


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸின் புள்ளிகளின் படி நாலந்தா கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்தா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தோமியர் கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி தோமியர் கல்லூரி முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாலந்தா கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 254/9d (82.2) – சிதார ஹபுஹின்ன 76, மனீஷ ரூபசிங்ஹ 51, லக்ஷித ரசஞ்சன 6/67

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 262/8 (90) – சமிந்து விஜேசிங்ஹ 79, ரவீன் டி சில்வா 63*, தெவின் எரியகம 2/35, டெல்லோன் பீரிஸ் 2/58, களன பெரேரா 2/60

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இன்னிங்ஸின்படி நாலந்த கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை

கதிரான மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இன்னிங்ஸின் படி செபஸ்தியன் கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

உலகின் முதல் 10 வீரர்களுள் இடம்பெற காத்திருக்கும் குசல் மெண்டிஸ்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்தியன் கல்லூரி அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.  

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 201 (51.2) – மனீஷ சில்வா 48, நவீன் பெர்னாண்டோ 33, பிரவீன் ஜயவிக்கிரம 5/64, பிரவீன் குரே 3/41

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 347 (95.1) நிஷித்த அபிலாஷ் 92, நுவனிது பெர்னாண்டோ 79, லசித் க்ரூஸ்புள்ளே 3/39, ரவீந்து பெர்னாண்டோ 3/118.  

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 256/2 (59) – லசித் க்ருஸ்புள்ளே 154*, கெவின் பெரேரா 67*

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இன்னிங்ஸின்படி புனித செபஸ்தியன் கல்லூரி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது..    


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மன்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் ஜோசப் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ரிச்மன்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 216 (65.3) – தவீஷ அபிஷேக் 78. துணித் வேல்லாலகே 4/65, மிறந்த விக்ரமகே 3/28.

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 118/3 (38) – செவான் ரசூல் 60*, ஷேஹான் டேனியல் 36*.