பிக் பாஷ் T20i தொடரில் விளையாடும் யுவராஜ் சிங்?

171
Vivo IPL 2017
BCCI

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மட்டுமின்றி .பி.எல் உள்ளிட்ட போட்டித் தொடர்களில் சிறப்பான சாதனைகள் பல புரிந்த சகலதுறை வீரரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதற்கு யுவராஜ் சிங் ஆர்வம் காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கென கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் அவருக்கான அணியை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி வழங்குவதில்லை. இதனால் பிக் பாஷ் உள்ளிட்ட எந்தவொரு T20I லீக் தொடர்களிலும் இந்திய வீரரும் இதுவரை இடம்பெறவில்லை.

எனினும், இம்முறை கரீபியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ப்ரவீன் தம்பிக்கு முதலில் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்

இதனையடுத்து கரீபியர் லீக்கில் களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான யுவராஜ் சிங், எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்

Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

பிசிசிஐ ஒப்பந்தப்படி, இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறும் வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் எல்லாவித கிரிக்கெட் தொடர்களிலும் எவ்வித அனுமதியும் இன்றி பங்கு பெறலாம்.

இதன்படி, கடந்த ஓராண்டாக கனடாவில் நடைபெற்ற குளோபல் லீக் டி20 தொடரிலும், அபுதாபியில் நடைபெற்ற T10 லீக் கிரிக்கெட் தொடரிலும் யுவராஜ் சிங் பங்கேற்றார்.

இந்நிலையில் பிக் பாஷ் லீக்கில் யுவராஜ் சிங் விளையாடுவதற்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் அவருக்கு உதவி புரிந்து வருவதாக யுவராஜ் சிங்கின் முகாமையாளர் ஜேசன் வோர்ன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவிக்கையில்

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடம் பேசி வருகிறோம். இந்த ஆண்டு யுவராஜ் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

IPL தொடரின் லீக் சுற்று போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டு அறிமுகமான யுவராஜ் சிங், 2017ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார். 2007ஆம் ஆண்டு T20i உலகக் கிண்ணம் மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களிலும் அபாரமாக செயல்பட்டார்.

குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர் யுவராஜ் சிங், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பிறகு புற்று நோய் காரணமாக சில மாதங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார்

பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார்.

பின்னர் போதிய உடல் தகுதியின்மை மற்றும் போர்ம் ஆகியவை இல்லாததால் அவ்வப் போது இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்தார்

IPL தொடரிலிருந்து விலகும் ஹர்பஜன் சிங்

கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ஓட்டங்களையும், 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 T20i போட்டிகளையும் இவர் விளையாடியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<