கிழக்கு மாகாண அணிக்கு மீண்டும் தோல்வி

203

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (15) நடைபெற்றன.

கிழக்கு மாகாணம் எதிர் மேல் மாகாணம் தெற்கு

மீண்டும் ஒருமுறை துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சோபிக்கத் தவறிய கிழக்கு மாகாண அணி, மேல் மாகாண தெற்கு அணியிடமும் ஆறு விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மேல் மாகாண தெற்கு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கிழக்கு மாகாணம் விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 49.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கிழக்கு மாகாணம் சார்பாக எல். ஆகாஷ் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றார்.

மேல் மாகாண தெற்கு, மத்திய அணிகளுக்கு இலகு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான…

இதன் போது நுவனிது பெர்னாண்டோ, தாஷிக் பெரேரா மற்றும் ரொஹான் சஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பாதம்பார்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணி எந்த நெருக்கடியும் இன்றி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 122 ஓட்டங்களை எட்டியது. சிறப்பாக துடுப்பாடிய நிஷான் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றார்.

கிழக்கு மாகாண அணி தனது முதல் போட்டியில் மேல் மாகாணம் மத்திய அணியிடம் 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் – 121 (49.2) – எல். ஆகாஷ் 21, நுவனிது பெர்னாண்டோ 2/16, தாஷிக் பெரேரா 2/20, ரொஹான் சஞ்சய 2/21

மேல் மாகாணம் தெற்கு – 122/4 (30.5) – நிஷான் பெர்னாண்டோ 58*

முடிவு மேல் மாகாண தெற்கு அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


தென் மாகாணம் எதிர் ஊவா மாகாணம்

நவோத் பரணவிதானவின் வேகமான துடுப்பாட்டத்தின் மூலம் ஊவா மாகாணத்துக்கு எதிரான போட்டியில் தென் மாகாண அணி டக்வத் லுவிஸ் முறையில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழையால் 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஊவா மாகாணதிற்கு தீக்ஷன கலிந்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் ஊவா மாகாண அணி 36 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் மாகாண அணி வேகமாக ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை விரைவாக எட்டியது. இதில் மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த இடது கை துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்றதோடு வினுர துல்சர 44 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் தென் மாகாண அணி 22 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் – 165/7 (36) – தீக்ஷன கலிந்து 67*, இஷான் சங்கீத் 26, சேதக்க தெனுவன் 24, நிபுன் மாலிங்க 2/26, டில்ஷான் மதுஷங்க 2/41

தென் மாகாணம் – 172/3 (22) – நவோத் பரணவிதான 82*, வினுர துல்சர 44

முடிவு தென் மாகாண அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை) 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க