பங்களாதேஷுடன் முதல் டெஸ்டில் விளையாடவுள்ள அயர்லாந்து!

Ireland tour of Bangladesh 2023

55

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

சுற்றுலா அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி முதல் ஏப்ரல் 8ம் திகதிவரை ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன.

பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு

அயர்லாந்து அணி 2008ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடர் ஒன்றில் பங்கேற்கவுள்ளது.

இதில் முக்கிய அம்சமாக இதுவரையில் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள அயர்லாந்து அணி, முதன்முறையாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி புறப்பட்டுச்செல்லவுள்ள அயர்லாந்து அணி மார்ச் 18, 21 மற்றும் 23ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதனைத்தொடர்ந்து 27, 29 மற்றும் 31ம் திகதிகளில் T20I போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன.

ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் நிறைவடைந்த பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் ஏப்ரல் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அயர்லாந்து அணியானது இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொண்டுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<