ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம்! ; T20I தொடரை தவறவிடும் ராஹுல்!

India tour of West Indies 2022

64

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் கே.எல். ராஹுலிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள கே.எல்.ராஹுல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடரில் விளையாட மாட்டார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> க்ரிஷானின் கன்னி சதத்தால் SSC கழகத்துக்கு வெற்றி

ஜேர்மனியில் வைத்து ராஹுலின் கீழ் வயிற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக அவர், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடவில்லை.

எனினும், மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடரில் விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தற்போது அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால் T20I தொடரையும் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று (22) ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றைய தினம் (22) ஆரம்பிக்கவுள்ளதுடன், T20I தொடர் இம்மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<