மேல் மாகாண தெற்கு, மத்திய அணிகளுக்கு இலகு வெற்றி

225

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (13) நடைபெற்றன.

மேல் மாகாணம் தெற்கு எதிர் ஊவா மாகாணம்

நிஷான் பெர்னாண்டோ மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் உவா மாகாணத்திற்கு எதிராக 300 ஓட்டங்களை கடந்த மேல் மாகாண தெற்கு அணி 232 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றது.

சிலாபம் மேரியன்ஸ் கிரக்கெட் கழக மைதானத்தில் B குழுவுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேல் மாகாண தெற்கு அணிக்கு நிஷான் பெர்னாண்டோ (113) சதம் கண்டார். அதேபோன்று நுவனிது பெர்னாண்டே (98) சதத்தை 2 ஓட்டங்களால் தவறவிட்டார்.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு..

இதன் மூலம் மேல் மாகாண தெற்கு அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஊவா மாகாணம் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து மிகப் பெரிய தோல்வி ஒன்றை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் தெற்கு – 326/6 (50) – நிஷான் பெர்னாண்டோ 113, நுவனிது பெர்னாண்டோ 98, ஜனிஷ்க பெரேரா 33, நிஷித அபிலாஷ் 29, ஜனிது இந்துவர 25*, ரவிந்து தர்ஷன 3/62

ஊவா மாகாணம் – 94 (29.1) – ரவிந்து தர்ஷன 36, லேஷான் திலுக்ஷன 20, ரொஹான் சஞ்சய 3/09, அவிஷ்க லக்ஷான் 3/09

முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 232 ஓட்டங்களால் வெற்றி  


மேல் மாகாணம் மத்திய எதிர் கிழக்கு மாகாணம்

மேல் மாகாணம் மத்திய அணிக்கு எதிராக அனைத்து துறைகளிலும் சோபிக்க தவறிய கிழக்கு மாகாண அணி 275 ஓட்டங்களால் பெரும் தோல்வி ஒன்றை பதிவு செய்தது.

இதன் போதும் மேல் மாகாணம் மத்திய அணிக்காக பசிந்து சூரிய பண்டார 134 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் கலன பெரேரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி பிரதான மைதானத்தில் B குழுவுக்காக நடந்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி மேல் மாகாணம் மத்திய அணி மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. அந்த அணிக்காக சொனால் தினுஷ (71), கமில் மிஷாரா (52) ஆகியோரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

வட மாகாண அணியின் இறுதி நிமிடம் வரையிலான போராட்டம் வீண்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு..

எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தவறிய கிழக்கு மாகாண அணிக்காக தேவா டிலக்ஷன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாணம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 18.1 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பசிந்து டில்ஹார பெற்ற 21 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய – 321/6 (47) – பசிந்து சூரியபண்டார 134, சொனால் தினுஷ 71, கமில் மிஷாரா 52, சன்தூஷ் குணதிலக்க 25, சிதார ஹபுஹின்ன 22, தேவா டிலக்‌ஷான் 2/44

கிழக்கு மாகாணம் – 46 (18.1) – பசிந்து டில்ஹார 21, கலன பெரேரா 4/19, லக்ஷித ரசன்ஜன 2/04, சமிந்து விஜேசிங்க 2/13

முடிவு – மேல் மாகாணம் மத்திய அணி 275 ஓட்டங்களால் வெற்றி  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<