ஆசிய கரப்பந்தாட்ட அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய லங்கா லயன்ஸ் அணி

286

மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நடைபெற்று வருகின்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்ட தொடரின் முதல் சுற்றின் இறுதிப் லீக் ஆட்டத்தில் தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா அணியை வெற்றி கொண்ட இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி, சி குழுவில் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவுசெய்து தோல்வி அடையாத அணியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு இலங்கை தகுதி

மியன்மாரின் நே – பெய் – தோ (Nay Pyi Taw) நகரில் நகரில் …

இம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற லங்கா லயன்ஸ் அணி, நேற்று (01) நடைபெற்ற தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா அணியுடனான பரபரப்பான இறுதி லீக் போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.   

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவுஸ்திரேலியாவின் கென்பரா ஹீட் மற்றும் ஹொங்கொங்கின் யான்சாய் அணிகளுக்கு எதிராக இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி வெற்றிகளைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், நேற்று பிரேசில் நாட்டு வீரர்களை உள்ளடக்கிய தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா அணியுடன் நடைபெற்ற சவால்மிக்க போட்டியின் முதலிரண்டு செட்களிலும் முறையே 20-25, 23-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தது.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி, முறையே 25-16, 25-23, 15-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று 3-2 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் போது

இதன்படி, சி குழுவில் இடம்பெற்ற அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றிபெற்ற அணியாக லங்கா லயன்ஸ் அணி முதலிடத்தைப் பெற்று சம்பியன் அணியைத் தெரிவு செய்கின்ற சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

தேசிய விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டத்தில் மேல் மாகாணம் சம்பியன்

மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த 44ஆவது தேசிய …

சிரேஷ்ட மற்றும் தேசிய வீரர்களைக் கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட அணியொன்று அண்மைக்காலத்தில் சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்டத் தொடரொன்றில் லீக் சுற்றில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது வரலாற்றில் இடம்பெற்றது.

இலங்கை அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட செர்பிய நாட்டைச் சேர்ந்த கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான டெஜான் டுலிசிவிக்கின் பங்களிப்பு முக்கிய காரணம் என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் அலோசகர் .எஸ் நாலக தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் 102 வருடகால கரப்பந்தாட்ட வரலாற்றில் இந்நாட்டின் கரப்பந்தாட்ட அணியொன்று சர்வதேசப் போட்டியொன்றில் லீக் சுற்றில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, இலங்கை அணி, நாளை (03) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது சுற்றுப் போட்டியில் வரவேற்பு நாடான மியன்மாரின் ஏசியா வேர்ல்ட் கப் அணியை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

சி குழுவின் போட்டி முடிவுகள்

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…