லங்கா T10 லீக்கில் வேறு இரண்டு புதிய அணிகள்

Lanka T10 League 

51

அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடரில் புதிய இரண்டு அணிகள் பிரதியீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>> அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை 

அந்தவகையில் லங்கா T10 லீக் தொடரின் அணிகளான நிகம்போ பிரேவ்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகியவற்றுக்குப் பதிலாக முறையே நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவார்ஸ் ஆகிய அணிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன 

பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள லங்கா T10 லீக் தொடர் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன 

அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன், இந்த தொடருக்கான வீரர்கள் நிரல்படுத்தல் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அணிகள் 

  1. கொழும்பு ஜக்குவார்ஸ் 
  2. கோல் மார்வெல்ஸ் 
  3. ஜப்னா டைடன்ஸ் 
  4. கண்டி போல்ட்ஸ் 
  5. ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் 
  6. நுவரெலியா கிங்ஸ்  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<