ஆசிய, உலக பதினொருவர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம்

6662
brecorder.com

ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் இரண்டு டி20 போட்டிகளை நடாத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது. 

நவீன உலகில் கிரிக்கெட் விளையாட்டு எல்லோராலும் விரும்பி, நேரம் செலவு செய்து பார்க்கக்கூடிய ஒரு விளையாட்டாக அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு நாடுகளின் அணிகளிலிருந்து குறிப்பிட்ட வீரர்களை மிகவும் விரும்பத்தக்க வீரர்களாக கொண்டு காணப்படுகின்றனர். 

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ரெய்னார்ட்

இலங்கை வளர்ந்துவரும் அணியுடனான….

அந்த வகையில் இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இவ்வாறான நட்சத்திரங்களின் பங்குபற்றுதலுடன் கூடிய கிரிக்கெட் தொடரானது மிகவும் எதிர்பார்ப்பு மிக்க ஒரு கிரிக்கெட் தொடராக அமைந்திருக்கின்றது. 

பங்களாதேஷ் நாடானது 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதேஷுக்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975 ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் இந்த உலகை விட்டும் பிரிந்து சென்றார்.

இந்நிலையில் அடுத்த வருடம் (2020) ஷேக் முஜீபுர் ரஹ்மான்  எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அந்த அடிப்படையில் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மேலே குறிப்பிட்டுள்ளவாறு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. 

ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும். 

பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரின்பின் இலங்கையின் தரவரிசையில் ஏற்படும் மாற்றங்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு….

அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும். மேலும் குறித்த அணிகளில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திரங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பதினொருவர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை

2020 மார்ச் 18 – முதலாவது டி20 போட்டி – மிர்பூர்

2020 மார்ச் 21 – இரண்டாவது டி20 போட்டி – மிர்பூர்   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க