அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை 

53
West Indies Tour of Sri Lanka 2024

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸில் நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த நிலையில், இப்போட்டியின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் மற்றும் அணித்தலைவர் ஷாய் ஹோப் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 4ஆவது ஓவரை அல்ஸாரி ஜோசப் வீச அதனை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் ஹொக்ஸ் எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரில் அல்ஸாரி ஜோசப் களத்தடுப்பாளர்களை மாற்றும் படி அணித்தலைசர் ஷாய் ஹோப்பிடன் சொன்னார்.

ஆனால் அதற்னை ஏற்க மறுத்த ஷாய் ஹோப் களத்தடுப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் பந்துவீசும் படி கூறினார். இதனால் அதிருப்தியடைந்த அல்ஸாரி ஜோசப் வசை பாடிய படியே, அடுத்த பந்தை வீசியதுடன் அதில் ஜோர்டன் கொக்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இருப்பினும், அந்த ஓவர் முடிந்த கையோடு அல்ஸாரி ஜோசப் யாரிடமும் ஏதும் சொல்லாமல் ஓய்வறைக்குச் சென்றார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த ஓவரில் 10 வீரர்களுடன் களத்தடுப்பில் ஈடுபட்டது.

எனினும், 6ஆவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் ஆனால், 12ஆவது ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை,அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார்.அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து 5 ஓவர்கள் பந்து வீசினார். ஏவ்வாறாயினும், இந்தப் போட்;டியில் 10 ஓவர்கள் பந்துவீசிய அல்ஸாரி ஜோசப், 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனிடையே, இச்சம்பவம் மேற்கிந்தியத் தீவுகள் க்pரிக்கெட் சபை வாட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அணியின் தலைவர் ஷாய் ஹோப் இதுகுறித்து ஏதும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

அதேபோல, அந்த அணியின் பயிற்சியாளர் டெரன் சமி, அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயலானது கண்டிக்கத்தக்கது என்றும் போட்டியின் பிறகு குற்றம் சுமத்தியிருந்தார். அதுமாத்திரமின்றி, முன்னாள் வீரர்கள் சிலரும் அல்ஸாரி ஜோசப்பின் மோசமான நடத்தை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், போட்டியின் போது மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய காரணத்தால் அல்ஸாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைக்கு எதிரானதாகும். இத்தகைய நடத்தையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தனது செயலிற்கு மன்னிப்பு தெரிவித்துள்ள அல்ஸாரி ஜோசப் கூறுகையில், ‘அணித்தலைவர் ஷாய் ஹோப் மற்றும் எனது சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திடம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ரசிகர்களிடம் நான் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். வீரர்களின் ஒவ்வொரு செயலில் உளள ஒரு சிறிய குறைபாடு கூட தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனது செயலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<