தேசிய மகளிர் கரப்பந்து அணிக்கான தெரிவு இம்மாதம்

397

இலங்கை தேசிய மகளிர் கரப்பந்தாட்ட அணிக்கு வீராங்கனைகளை உள்வாங்குவதற்கான தெரிவுகள் இம்மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கரப்பந்து கூட்டமைப்பின் மகளிர் சவால் கிண்ண தொடர் மற்றும் மத்திய ஆசிய மகளிர் கரப்பந்து சுற்றுத் தொடர்களுக்கு இலங்கை அணியை தயார்படுத்துவதற்காகவே இந்த தெரிவு இடம்பெறவுள்ளது.

குறித்த தெரிவுகள் இம்மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள  விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் தெரிவுகளுக்கான திகதிகள் பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த தெரிவுகள் இம்மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறும் என்று இலங்கை கரப்பந்தாட்ட சங்கம் தெரிவித்துள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<