இலங்கை 23 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி பங்களாதேஷ் பயணம்

77

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடரில் (CAVA U23 Men’s Volleyball Championship) பங்ககேற்கவுள்ள இலங்கை அணி, இன்று (20) பங்களாதேஷ் பயணமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கை, பங்களாதேஷ், கிரிகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 4 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக ருச்சிர சம்பத் செயல்படவுள்ளதுடன், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக சமிந்த குமார பணியாற்றவுள்ளார்.

இலங்கை 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் கரப்பந்தாட்ட அணி விபரம்:

ருச்சிர சம்பத் (தலைவர்), சுஜித் திலங்க, லஹிரு மதுவந்த, பிரனீத் தினேந்திர, அஷேன் மலின்த, தெனெத் ஹன்சன, லஹிரு பிரமுதித, சச்சித மலித், ஷனுக மதுபாசன, துலஞ்சன் சந்தீப, கவிஷ்க மதுசங்க மற்றும் நவின் கௌசல்ய

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<