இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு மற்றுமொரு ஆசிய பதக்கம்

266

பங்களாதேஷில் அண்மையில் நிறைவடைந்த 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் நேபாள அணியை 3–2 என்ற செட்களால் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

மிர்பூர் நகரில் உள்ள ஷஹீத் சுஹ்ரவர்தி தேசிய உள்ளக அரங்கில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரில் இலங்கை, பங்களாதேஷ், கிரிகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்டன.

இந்தத் தொடரின் ஆரம்ப சுற்றில் கிரிகிஸ்தானிடம் 1–3 என்ற செட்களாலும் பங்களாதேஷிடம் 2–3 செட்களாலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கிரிகிஸ்தான் அணியிடம் 0–3 என்ற செட்களால் இலங்கை அணி தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி பெறுகின்ற வாய்ப்பையும் இழந்தது.

எவ்வாறாயினும், கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் நேபாள அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, முதல் சுற்றில் 22–25 என பின்தங்கிய போதிலும், எஞ்சிய மூன்று செட்களையும் 25-19, 20-25, 15-10 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.

24 புள்ளிகளை பெற்றுக்கொடுத்து இலங்கை இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கவிஷ்க மதுஷங்க போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<