TPT ஹொக்கி மும்முனை போட்டி முடிவுகள்
2016ம் ஆண்டுக்கான, இரண்டாவது TPT ஹாக்கி மும்முனைப் போட்டிகள் செப்.10 காலை 9.00மணிக்கு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் அருட்தந்தை சமிந்த பெர்னாண்டோவினால் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரவேற்புரை அனுப் அமலினால் நடாத்தப்பட்டது
இப்போட்டிகள் வயதின் அடிப்டையில் 5 பிரிவுகளின் கீழ் போட்டியிடப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட போட்டியில் நடப்பு சாம்பியன் புனித தோமஸ் கல்லூரி இம்முறையும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி புனித திரித்துவ அணியோடு இறுதிப்போட்டியில் மோதியது.
போட்டி கேடயங்கள்
அதிகளவான போட்டி பார்வையாளர்களைக் கொண்ட விறுவிறுப்பான இப்போட்டியில் முழு நேர முடிவில் எவ்விதமான கோல்களையும் இரு அணியும் போடவில்லை. கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்திலும் கோல்கள் போடப்படாமையினால், நடுவர் குழு 8 செகண்ட், ”சிங்கள் ஷூட் அவுட்” மூலம் சாம்பியன் அணியைத் தெரிவு செய்ய தீர்மானித்தது.
நடுவர் குழாம்
இதன் படி புனித தோமஸ் கல்லூரிக்காக, அணித்தலைவர் ஜெவிந்து பீரிஸ்சும், கசுன் ஜெயசிங்க்கே புனித திருத்துவ கல்லூரிக்காக களம் இறங்கினர். எனினும் இருவரும் ”சிங்கள் ஷூட் அவுட்” மூலம் 4-4 என சமமான கோல்களைப் பெற்றுக்கொண்டமையால் போட்டி சமநிலையாகியது. போதிய வெளிச்சமின்மையால் நடுவர் குழு, புனித திரித்துவ கல்லூரியும் புனித தோமஸ் கல்லூரியும் “கூட்டு சாம்பியன்” என அறிவித்தது.
30-40 இடைப்பட்ட வயது TPT 2016 ஹாக்கி சாம்பியன் பட்டத்தை புனித பேதுரு கல்லூரி பெற்றுக்கொண்டது
புனித திரித்துவ கல்லூரியும் புனித தாமஸ் கல்லூரியும் “கூட்டு சாம்பியன்”
இப்போட்டிகளில், மற்றைய வயது பிரிவு அணிகளும், வெற்றி கோப்பைக்காக கடும் போட்டியிட்டு கொண்டனர், போட்டிகளின் முடிவுகள் பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள இணையத்தள முகவரிக்கு செல்லவும்.
இப்போட்டிகளில் போது மூன்று பாடசாலை புதிய/பழைய மாணவர்களும், தங்களுக்குள் நட்பு ரீதியாக புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்த வருடத்துக்கான 3வது TPT 2017 ஹொக்கி மும்முனைப் போட்டிகள் புனித திருத்துவ கல்லூரியில் இடம் பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.