IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை

70

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

IPL தொடர் இலங்கையில் நடத்தப்படுமா?

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் … .

கொரோனா வைரஸ் காரணமாக 13 ஆவது .பி.எல் கிரிக்கெட் தொடர் நிறுத்திவைக்கப்படுள்ளது. இந்தாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்த கொரோனா வைரஸ் காரணமாக வீரர்கள் நலம் கருதி .பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, .பி.எல் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பரில் நடத்தப்படலாம் அல்லது வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின

இதனையடுத்து .பி.எல் தொடரை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ தரப்பில் இலங்கையால் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என தெரிவித்தது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு இராட்சியம் பிசிசிஐக்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து வெளியிடுகையில், .பி.எல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது’ என தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் இப்போது முக்கியம். இப்போது உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. எனவே, இப்போது எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியது என்றும் அருண் துமால் கூறியுள்ளார்.  

ஏற்கெனவே, 2014ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக .பி.எல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<