தலைவர் பதவியை கொஹ்லிக்கு அளிக்க சரியான நேரம் – சாஸ்திரி

661
Time right for Dhoni to hand over to Kohli - Shastri

கடந்த 3 மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற போட்டிகளில் விராத் கொஹ்லி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். டி20 ஆசியக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணம் மற்றும் கடந்த வாரம் முடிவுற்ற 9ஆவது ஐ.பி.எல் தொடர் போன்றவற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை கொஹ்லி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னால் இயக்குனரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி இதுதான் விராத் கொஹ்லி இந்திய அணியின் தலைவராக சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி பேசுகையில்டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து வகைக் கிரிக்கட் போட்டிகளுக்கும் கொஹ்லி தலைவராக செயற்படத் தயாராகிவிட்டார். நான் தெரிவுக் குழுத் தலைவராக இருந்தால் இது போன்றுதான் சிந்திப்பேன்.

டில்ஷான் தொடர்பான கவலையான செய்தி

இதுதான் சிந்திக்க வேண்டிய நேரம். ஏனென்றால் அடுத்த உலகக் கிண்ணப் போட்டி 2019 இல்தான் வருகிறது. இந்திய அணிக்கு அதற்கிடையில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லை. எனவே இதுதான் சரியான நேரமாகும்.

அடுத்த உலகக் கிண்ணத்திற்கு முன்பாக நமக்கு நிறையக் காலம் உள்ளதால், கொஹ்லியை தலைவராக்கி உலகக் கிண்ணத்திற்கு ஏற்ற வலுவான அணியை கட்டமைக்க இது நமக்கு நல்ல வாய்ப்பாகும்.

டோணி ஒரு வீரராக ஜாலியாக விளையாடட்டும். தனது விளையாட்டை எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் அனுபவித்து ஆட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

டோணி ஒரு அருமையான வீரர். அவரது திறமையை யாரும் பறித்து விட முடியாது. அந்தத் திறமையான ஆட்டத்தை முழுமையான முறையில் ரசித்துப் பார்க்க அவரிடமிருந்து தலைமைப் பதவியை எடுக்க வேண்டும். அவருக்கும் அப்போதுதான் ரசித்து விளையாட வாய்ப்புக் கிடைக்கும்.

முடிவெடுப்பது கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. முடிவெடுக்காவிட்டால் அது சிக்கலில்தான் முடியும். இப்போது முடிவெடுப்பதே சரியானதாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் ஸ்டீவ் வோ நல்ல ஆட்டத்திறனில் இருந்த போதுதான் ரிக்கி பொண்டிங் தெரிந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்து மைக்கல் க்ளார்க் வந்தார். இப்போது ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்.

இதேபோல நமது அணியிலும் அணித் தலைவர் மாற்றம் சீரிய முறையில் இருக்க வேண்டியது அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்