9ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடரின்  இறுதிப் போட்டி இன்று பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி எதிர்த்து விளையாடியது.  

ஐ.பி.எல் வரலாற்றில் பென் கட்டிங் நிகழ்த்திய சாதனை 

இதுவரை இந்த இரண்டு அணிகளும் .பி.எல். கிண்ணத்தை வென்றதில்லை. இதனால் முதல் முறையாகக் கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்துடன் இரு அணிகளும் விளையாடின.இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரயிசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.பொதுவாக பெங்களூரில் நடைபெறும் போட்டிகளில் அனைத்து அணிகளும் முதலில் பந்து வீசவே முடிவு செய்யும் ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் டேவிட் வோர்னர் முதலில் துடுப்பாட்டத்தை முடிவு செய்தார்.

பெங்களூர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹைதராபாத் அணியில், காயம் காரணமாகக் கடந்த போட்டியில் விளையாடாத முஸ்தபிசுர் ரஹ்மான் அணிக்கு திரும்பியிருந்தார். போல்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இறுதிப் போட்டியில் விளையாடிய அணி விபரம்

சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி

டேவிட் வார்னர், ஷிகார் தவான், மொயிசஸ் ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங், தீபக் ஹூடா, பென் கட்டிங், நமன் ஓஜா, பிபுல் சர்மா, புவனேஷ்வர் குமார், ஷரண், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

க்றிஸ் கெய்ல், விராத் கொஹ்லி , டி வில்லியர்ஸ், லோகேஷ் ராஹுல், ஷேன் வொட்சன், ஸ்டூவர்ட் பின்னி, சச்சின் பேபி, இக்பால் அப்துல்லா, க்றிஸ் ஜோர்டன், ஸ்ரீநாத் அரவிந்த், சாஹல்.

போட்டியின் நடுவர்கள் : குமார் தர்மசேன மற்றும் ப்ரூஸ் ஒக்சன்போர்ட்

இதன்படி ஹைதராபாத் அணி சார்பாக டேவிட் வோர்னர் மற்றும் ஷிகார் தவான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள். ஹைதராபாத் அணி  ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி ஆரம்ப ஜோடி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். தவான் நிதானமாக ஆட வோர்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். முதல் விக்கட்டுக்காக 40 பந்துகளில் 63 ஓட்டங்கள் பகிரப்பட்ட பின் தவான் 28 ஓட்டங்களை எடுத்திருந்த போது சஹால் வீசிய  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி பாரிய நெருக்கடியில்

இதனை அடுத்து களமிறங்கிய ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து தலைவர் வோர்னருடன் யுவராஜ் சிங் இணைந்தார். இந்த ஜோடி பெங்களூர் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஓட்டங்களைக் குவித்தது. பின் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த  வோர்னர் ஆட்டம் இழந்தார். அப்போது ஹைதராபாத் அணி 13.3 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

வோர்னரின் விக்கட்டைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய யுவராஜ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 38 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கட்டால் மின்னல் வேகத்தில் உயர்ந்த ஹைதராபாத் அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. ஆனாலும் இறுதி நேரத்தில்  களமிறங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சகலதுறை வீரரான பென் கட்டிங் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 39 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 117 மீற்றர் நீளமான சிக்ஸரும் அடங்கும். அத்தோடு அந்த சிக்ஸர்  இவ்வருட .பி.எல் தொடரில் விளாசப்பட்ட பெரிய சிக்ஸராகும். இறுதில் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 208 ஓட்டங்களைக் குவித்தது.

பெங்களூர் அணியின்  பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டன் 4 ஓவர்கள் பந்து வீசி 45 ஓட்டங்களைக் கொடுத்தாலும் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் சிறப்பாகப் பந்து வீசிய அரவிந்த் 4 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பெங்களூர் அணி முதல் முறையாக .பி.எல் கிண்ணத்தை வெல்ல வேண்டுமானால் அந்த அணியில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களான கொஹ்லி, வில்லியர்ஸ், கெயில் மற்றும் வோட்சன் ஆகியோர் தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் 209 என்ற பாரிய வெற்றி இலக்குடன் களமிறங்கியது.

பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக  கெய்லும், கொஹ்ளியும் களமிறங்கினார்கள்.

யுவராஜ் சிங் புதிய சாதனை

இந்த .பி.எல். தொடரில் சரியாக விளையாடாத கெய்ல், முக்கியமான இந்தப் போட்டியில் தனது திறமையைக் காட்டினார். இதனால் பெங்களூர் அணியின் ஓட்டங்கள் முதல் ஓவர் தொடக்கம் வேகமாக உயர்ந்தது. வழக்கம் போல் கெய்ல் பெற்ற ஓட்டங்களில் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் அதிகமாக இருந்தது. கொஹ்லி மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு கெய்லின் வானவேடிக்கையை ரசித்தார்.

கெய்ல் ஓட்டங்களைக் குவித்த வேகத்தைப் பார்த்தபோது பெங்களூர் அணி 18 ஓவர்களிலேயே வெற்றிபெற்றுவிடும் என்று தோன்றியது. ஆனால் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை எடுத்திருந்த போது கெய்ல் பென் கட்டிங் வீசிய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கெய்ல் ஆட்டமிழந்ததும் கொஹ்லி வேகமாகத் துடுப்பெடுத்தாட முயன்றார்  ஆனால் எதிர்பாராதவிதமாக 35 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஷரண் வீசிய பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான டி வில்லியர்ஸ் 5 ஓட்டங்களோடும் ,வொட்சன் 11 ஓட்டங்களோடும்  ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்வியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

கடைசி ஓவரில் பெங்களூர் அணிக்கு வெற்றிபெற 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 9 ஓட்டங்களை  மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர்  அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி முதல் முறையாக .பி.எல். கிண்ணத்தை வென்று சாதனைபடைத்தது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில்பென் கட்டிங் 2 விக்கட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷரண் மற்றும் பிபுல் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதமும் வீழ்த்தினார்கள். சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். ஆனால் விக்கட் எதையும் கைப்பற்றவில்லை.

இந்த இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக பென் கட்டிங் தெரிவு செய்யப்பட்டார். .பி.எல் போட்டித் தொடரின் சிறந்த வீரராக விராத் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்