60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது ஐ.பி.எல் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது.

நேற்றைய இறுதிப் போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரயிசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியில் சன்ரயிசஸ் ஹைதராபாத் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று ஐ.பி.எல் சம்பியன் பட்டதை வென்றது.

இந்தப் போட்டியின் பின் வழங்கப்பட்ட ஐ.பி.எல் விருதுகள்

அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் (ஒரேஞ் தொப்பி) – விராத் கொஹ்லி

Virat Kohli

இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய விராத் கொஹ்லி 81.08 என்ற துடுப்பாட்ட சராசரியில் மொத்தமாக 973 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 4 சதங்கள், 7 அரைச்சதங்கள், 83 பவுண்டரிகள் மற்றும் 36 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் (ஊதா தொப்பி) – புவனேஷ்வர் குமார்

Bhuvneshwar Kumarஇந்தத் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார் 21.30 என்ற பந்துவீச்சு சராசரியில் மொத்தமாக 23 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். அதில் சிறந்த பந்துவீச்சுப் பிரதி 29 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றியதாகும்.

மிகவும் மதிப்புமிக்க வீரர்விராத் கொஹ்லி

Virat Kohli - Most Valuable Playerஇந்தத் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரராக பெங்களூர் அணியின் தலைவர் மற்றும் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற விராத் கொஹ்லி தெரிவானார்.

சிறந்த பிடியெடுப்புசுரேஷ் ரயினா

Suresh Rainaகொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சுரேஷ் ரயினா முதல் ஸ்லிப்பில் இருந்து சூரியகுமார் யதவ்வின் பிடியெடுப்பை மிக அற்புதமாக மேலே பாய்ந்து பிடித்தார். இது தொடரின் சிறந்த பிடியெடுப்பாக தெரிவு செய்யப்பட்டு குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினாவிற்கு வழங்கப்பட்டது.

.பி.எல் தொடரில் வளர்ந்துவரும் வீரர்முஸ்தபிசுர் ரஹ்மான்

Mustafizur Rahman9ஆவது .பி.எல் தொடரின் வளர்ந்துவரும் வீரராக பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் தெரிவானார். உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் முகங்கொடுக்க முடியாத அளவிற்கு மிகச் சிறந்த அருமையான பந்துகளை அவர் வீசியிருந்தார். அத்தோடு 16 போட்டிகளில் 17 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அவரது ஓவரொன்ருக்கு ஓட்ட வீதம் 6.90 ஆக இருந்தது.

அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர்டி விலியர்ஸ்

AB de Villiersதொடரில் அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரருக்கான விருது டி விலியர்ஸிற்கு வழங்கப்பட்டது. இவர் இந்தத் தொடரில் மொத்தமாக 19 பிடியெடுப்புகளை எடுத்து இருந்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்