கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தார் மொர்தசா

84

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபீ மொர்தசா,  தான் கொவிட்-19 வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது மனைவி சுமோனா ஹக் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக மஷ்ரபி மொர்தசா சுட்டிக்காட்டியுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட்  அணி வீரர் மாத்திரமல்லமால், பாராளுமன்ற உறுப்பினரான மொர்தசா கடந்த ஜூன் 20ம் திகதி கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

DRS முறைமைக்கு எதிராக மீண்டும் கருத்து வெளியிட்ட சச்சின்

குறித்த விடயத்தினை அவர் தன்னுடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்ததுடன், விரைவில் தான் குணமடைய கடவுளை பிராத்தனை செய்யுமாறும் பதவிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (14) அவர் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிட்ட இவர், “நான் இன்று மாலை (14) கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையை அறிந்துக்கொண்டேன்.

எனக்காக பிராத்தனை செய்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஆனால், எனது மனைவி இதுவரையிலும், கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இரண்டு வாரங்கள் கடந்தும் அவர்  இன்னும் குணமடையவில்லை. எனவே அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்.

அதேநேரம், நான் எனது வீட்டிலிருந்து சிகிச்சைப்பெற்றுக்கொண்டேன். கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அனைவரும் நேர்மறையான சிந்தனையுடன் நம்பிக்கையாக இருங்கள். கடவுள் மீது நம்பிக்கை வைத்திருங்கள். நாம் ஒற்றுமையாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவோம்” என பதவிட்டிருந்தார்.

இதேவேளை, நபீஸ் இக்பால் மற்றும் நஷ்முல் இஸ்லாம் ஆகிய வீரர்களும், மஷ்ரபீ மொர்தசாவுடன் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். அவர்களும் சிகிச்சையின் பின்னர் குணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<