அறிமுக வீரருடன் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அயர்லாந்து

73
ariananews.af

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து அணியின் குழாம் வெளியிடப்பட்டதற்கமைய இரு வீரர்களின் மாற்றங்களுடன் ஒரு வீரருக்கு ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அம்ப்ரிஸின் சதத்துடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மேற்கிந்திய தீவுகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு…

இன்னும் இரு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் பங்குபற்றலுடன் தற்போது முக்கோண ஒருநாள் சர்வதேச தொடர் ஒன்றினை நடாத்தி வருகின்றது. இன்றுடன் (17) நிறைவடையவுள்ள குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பினை சொந்த நாடான அயர்லாந்து அணி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அயர்லாந்து அணியானது அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. இதற்கான அயர்லாந்து அணியின் 14 பேர் கொண்ட ஒருநாள் குழாம் நேற்று (16) அந்நாட்டு கிரிக்கெட் சபை தேர்வுக்குழுத் தலைவர் அண்ட்ரூ வைட்டினால் வெளியிடப்பட்டிருந்தது.

உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார

ஒரு பில்லியனுக்கும் அதிகமான….

இதில், முன்னதாக அறிவிக்கப்பட்ட முக்கோண ஒருநாள் சர்வதேச தொடருக்கான அயர்லாந்து அணியின் குழாமிலிருந்து இரண்டு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய வடிவிலான ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்திருந்த இங்கிலாந்துஅயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியின் போது அயர்லாந்து அணிக்காக 56ஆவது வீரராக ஒருநாள் அறிமுகம் பெற்ற 19 வயதுடைய இளம் பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜொஸ் லிட்டில் ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

தற்போது நடைபெற்றுவரும் முக்கோண ஒருநாள் தொடரின் போது இவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே இவர் ஆப்கான் அணிக்கெதிரான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் உடற்தகுதி வைத்தியர் மார்க் ரௌஸா தெரிவித்துள்ளார்.  

இவரின் வெற்றிடத்துக்காக அயர்லாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஆறு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 24 வயதுடைய பந்துவீச்சு சகலதுறை வீரரான டெரோன் கேன் ஒருநாள் குழாமுக்கு அறிமுக வீரரான இணைக்கப்பட்டுள்ளார்.

அபூ ஜெயிட்டின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…

மேலும், இரண்டு ஆண்டுகளின் பின்னர் முக்கோண ஒருநாள் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் தொம்ப்ஸன் முக்கோண ஒருநாள் தொடரில் எந்தவித போட்டிகளிலும் விளையாடாத நிலையில் ஆப்கான் அணிக்கெதிரான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த ஆப்கான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் டி20 சர்வதேச தொடரின் போட்டிகளில் இவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் வெற்றிடத்துக்காக நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சகலதுறை வீரரான மார்க் அடியர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள புதிய குழாமில் விக்கெட் காப்பாளர் உள்ளடங்களாக ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், மூன்று சகலதுறை வீரர்கள் மற்றும் ஆறு பந்துவீச்சாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

அயர்லாந்து அணியின் ஒருநாள் குழாம்

வில்லியம் போட்டர்பீல்ட் (அணித்தலைவர்), மார்க் அடியர், அண்ட்ரூ பெல்பேனி, கிரோஜ் டொக்ரெல், டெரோன் கேன், அண்ட்ரூ மெக்பிரைன், பெரி மெக்கார்த்தி, ஜேம்ஸ் மெக்கலம், டிம் முர்டெக், கெவின் பிரைன், பெய்ட் ரேங்கின், போல் ஸ்டேர்லிங், லோர்கன் டுக்கர், கெரி வில்சன் (விக்கெட் காப்பாளர்)  

போட்டி அட்டவணை

  • மே 19 – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிபெல்பாஸ்ட்
  • மே 21 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டிபெல்பாஸ்ட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<