உலகக் கிண்ணத்தை சுவாரசியமாக மாற்றிய விடயங்கள் என்ன?

10

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது அத்தியாயம் (Edition), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் மிகவும் கோலகலமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. 

இந்த உலகக் கிண்ணத் தொடரினை, சில விடயங்கள் ஏற்கனவே நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து தனித்துவமாக மாற்றியிருந்தன. இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

BPL தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ள பிரபல வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் ……..

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மட்டும் ஆடிய உலகக் கிண்ணம்

உலகக் கிண்ணத்தில் ஆடிய அணிகளின் தலைவர்கள் ©AFP

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் 10 நாடுகளின் அணிகளே பங்குற்றின. இந்த 10 அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளாக இருந்த காரணத்தினால் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணமே வரலாற்றில் டெஸ்ட் அணிகளுடன் (ஐ.சி.சி. அங்கத்துவ அணிகள் இல்லாமல்) மட்டும் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணமாக அமைந்தது.  

அதேநேரம், உலகில் தற்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் அணிகள் 12 இருக்கின்றன என்பதால், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளும் (ஜிம்பாப்வே, அயர்லாந்து) பங்குபெறாத முதல் உலகக் கிண்ணமாகவும் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் அமைந்தது.

ஜிம்பாப்வே இல்லாத முதல் உலகக் கிண்ணம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ©AFP

அண்மையில் ஜிம்பாப்வே அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பத்தினை தற்காலிகமாக இழந்தது. இதற்கு முன்னர், ஜிம்பாப்வே அணி, 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மோசமான பெறுபேற்றினை காட்டிய காரணத்தினால் நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தினை ஏற்கனவே இழந்திருந்தது. 

இதன் மூலம், நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரே, 1983ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜிம்பாப்வே அணி விளையாடாத முதல் உலகக்க கிண்ணமாகும்.   

வித்தியாசமான முறையில் வெற்றியாளர் தெரிவு 

உலகக் கிண்ணத்துடன் இங்கிலாந்து அணி ©AFP

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் விளையாடியிருந்தன. 

உலகக் கிண்ணத்தை அலங்கரித்த வீரர்கள், அணிகளின் சாதனைகள்

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாவான ……..

எனினும், இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையான (241) ஓட்டங்கள் பெற ஆட்டம் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இவ்வாறு உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்ததால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்கும் நிலை உருவானது. 

சுப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம எண்ணிக்கையான (15) ஓட்டங்கள் பெற உலகக் கிண்ண வெற்றியாளர் அணி, இறுதிப் போட்டியில் அதிக பௌண்டரிகள் பெற்றதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. 

அந்தவகையில் உலகக் கிண்ண வெற்றியாளர்களாக இறுதிப் போட்டியில் அதிக பௌண்டரிகளை பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணியினர் மாறிக் கொண்டனர். 

கிட்டத்தட்ட 40 வருட வரலாற்றினையுடைய கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்பியன் அணியானது, பௌண்டரிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல்தடவையாகும். 

அதிக பார்வையாளர்களை ஈர்த்த கிரிக்கெட் தொடர்

பார்வையாளர்களுடன் உலகக் கிண்ண தொழில்நுட்ப குழுவின் அங்கத்துவர் © AFP

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரே, 2019ஆம் ஆண்டுவரையிலான உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரையில் அதிக பார்வைாயளர்கள் போட்டிகளைப் பார்வையிட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடராக அமைந்தது.  

மேலும், வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் பார்வையிட்ட கிரிக்கெட் தொடராகவும், 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் அமைந்தது. 

உலகக் கிண்ணத்தை அலங்கரித்த வீரர்கள், அணிகளின் சாதனைகள்

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாவான ……

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிக் காணொளிகள் (Videos) டிஜிடல் ஊடகங்களில் 2600 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. 

இதேநேரம், 220 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்ட இந்த உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை போட்டிகளை மட்டும் 675 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரிலேயே, போட்டியொன்று அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் (சுமார் 32 கெமராக்களின் உதவியுடன்) நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

வீரர்களின் தனித்துவ சாதனைகள்

சகிப் அல் ஹஸன் – பங்களாதேஷ்

சகிப் அல் ஹஸன்  ©AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றம் தந்திருந்த போதிலும், சகலதுறை வீரரான சகிப் அல் ஹஸன் காலம் பூராகவும் பங்களாதேஷ் அணி பெருமை அடைந்து கொள்ளக் கூடிய விடயம் ஒன்றினை நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணம் மூலம் செய்திருந்தார். 

இந்த உலகக் கிண்ணத் தொடரில், 606 ஓட்டங்களை குவித்துக் கொண்ட சகிப் அல் ஹஸன் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இதன் மூலம் அவர் குறிப்பிட்ட உலகக் கிண்ணம் ஒன்றில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்து, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலக சாதனை செய்திருந்தார்.  

ரோஹித் சர்மா – இந்தியா

ரோஹித் சர்மா  ©AFP

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 5 சதங்களை தனியொருவராக பெற்றிருந்தார். 

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்த வீரர்கள்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார் என்பதை…….

ரோஹித் சர்மா இந்த சதங்கள் மூலம், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் குறிப்பிட்ட அத்தியாயம் ஒன்றில் அதிக சதங்கள் பெற்ற வீரராக புதிய உலக சாதனை படைத்தார். 

இதற்கு முன்னர், இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 4 சதங்கள் பெற்று குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரின் அத்தியாயம் ஒன்றில் அதிக சதங்கள் பெற்றுக் கொண்ட வீரராக மாறியிருந்தார். 

மிச்செல் ஸ்டார்க் – அவுஸ்திரேலியா 

மிச்செல் ஸ்டார்க்  ©AFP

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 27 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்க் இந்த விக்கெட்டுக்களின் மூலம், குறித்த உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றினை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மிச்செல் ஸ்டார்க்கிற்கு முன்னர், குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அவுஸ்திரேலிய அணியின் கிளேன் மெக்ராத் காணப்பட்டிருந்தார். 

டோனியை முழுமையாக இழந்து மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ள இந்திய அணி

ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு ………..

கிளேன் மெக்ராத், 2007ஆம் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 26 விக்கெட்டுக்களை கைப்பற்றியே குறிப்பிட்ட சாதனையை தன்னகம் வைத்திருந்தார்.

 இயன் மோர்கன் – இங்கிலாந்து

இயன் மோர்கன் ©AFP

இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான குழுநிலை போட்டியில், தனியொருவராக 17 சிக்ஸர்களை விளாசியிருந்தார். 

இதன் மூலம் மோர்கன், ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராக உலக சாதனை செய்திருந்ததோடு உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் குறிப்பிட்ட போட்டி ஒன்றிலும் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராக மாறியிருந்தார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<