உலகக் கிண்ணத்தை அலங்கரித்த வீரர்கள், அணிகளின் சாதனைகள் 

277
©Getty

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாவான 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் நிறைவுக்கு வந்தது. சுமார் 45 நாட்கள் 48 போட்டிகள் என நடைபெற்ற இம்முறை உலக் கிண்ணத்தில் 10 அணிகள் பங்கேற்றிருந்ததுடன், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வரவேற்பு நாடான இங்கிலாந்து அணி முதன்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.  

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்து தொகுப்பை இங்கு பார்க்கலாம்.  

புரிந்து கொள்ள முடியாத ஓஷத, அஞ்செலோ பெரேரா ஆகியோரின் நீக்கம்

இலங்கைக்கு சுற்றுலா வரும் பங்களாதேஷ் அணியுடன், அடுத்த…

அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை

மென்செஸ்டரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களைக் குவித்தது. இது இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகப் பதிவாகியது.  

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான குறித்த போட்டியில் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியீட்டியது. இது இந்தத் தொடரில் ஓட்ட அடிப்படையில் ஒரு அணியின் சிறந்த வெற்றியாகவும் பதிவாகியது

இந்த உலகக் கிண்ணத் தொடரில் 300 ஓட்டங்களுக்கு மேல் 26 முறை அடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

இதேநேரம், கார்டிப்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியீட்டியது. இது விக்கெட்டுகள் அடிப்படையில் அணியொன்று பெற்றுக்கொண்ட சிறந்த வெற்றியாகப் பதிவாகியது.

அத்துடன், நொட்டிஹம்மில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது. இது இந்தத் தொடரில் அணியொன்று பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச ஓட்டமாகப் பதிவாகியது.  

கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதி மோதலை அலங்கரித்த சுவாரசியங்கள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது அத்தியாயம்….

அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீரர் 

இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 5 சதங்கள், ஒரு அரைச் சதம் உள்ளடங்கலாக 648 ஓட்டங்களைக் குவித்தார்

அதிகமான சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 5 சதங்களும், அதில் தொடர்ச்சியாக 3 சதங்களும் அடித்துள்ளார்.  

இதேநேரம், நொட்டிஹம்மில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், 147 பந்துகளில் 166 ஓட்டங்களைக் குவித்தார். இது இம்முறை உலகக் கிண்ணத்தில் வீரர் ஒருவர் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்டமாகவும் பதிவாகியது

உலகக் கிண்ணத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச சராசரியாக பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் 86.57 என்ற சராசரி ஓட்டங்களை தக்கவைத்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் அதிகமான பந்துகளைச் சந்தித்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் கேன் வில்லியம்ஸன் 771 பந்துகளைச் சந்தித்துள்ளார்

அரைச் சதங்கள்

உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து அரைச் சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்

உலகக் கிண்ணத்தில் அதிக அரைச் சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சகிப் அல் ஹசன் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா? Cricket Kalam 23

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற திறுப்புமுனைகள்….

 

பௌண்டரிகள் 

இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 1,983 பௌண்டரிகள் விளாசப்பட்டன. இதில் இங்கிலாந்து அணி சார்பில் 283 பௌண்டரிகளும், அவுஸ்திரேலியா சார்பில் 271 பௌண்டரிகளும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் சார்பில் முறையே 228, 210 பௌண்டரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.  

அத்துடன், இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்தின் ஜொன்னி பேர்ஸ்டோவ் ஆகியோர் தலா 67 பௌண்டரிகளைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

சிக்ஸர்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் 357 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இதில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 76 சிக்ஸர்களை அடித்தது. அவுஸ்திரேலிய அணி 44 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணி 36 சிக்ஸர்களுடன் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 27 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

அதிகமான சிக்ஸர் அடித்த துடுப்பாட்ட வீரர்களில் இங்கிலாந்து அணித் தலைவர் இயென் மோர்கன் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

அதிக விக்கெட்டுக்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பந்துவீச்சாளராக அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பிடித்தார். இவர் 10 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரை அடுத்து நியூசிலாந்தின் லுக்கி பெர்குசன் 21 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மான் 20 விக்கெட்டுக்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

திக்வெல்ல தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ்….

அத்துடன், இங்கிலாந்து ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 20, 18 விக்கெட்டுக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதேநேரம், லண்டனில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான சஹீன் ஷா அப்ரிடி, 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இது இம்முறை உலகக் கிண்ணத்தில் பதிவான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் இடம்பெற்றது.  

குறைந்த ஆட்டங்களில் சிறந்த பந்துவீச்சு சராசரியாக இந்திய அணியின் மொஹமட் ஷமி 4 போட்டிகளில் 13.79 என்ற சராசரி வைத்துள்ளார்.

 

ஹெட்ரிக் சாதனை 

இம்முறை உலகக் கிண்ணத்தில் 2 ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஷமி மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் ஹெட்ரிக் விக்கெட் கைப்பற்றினர்.

ஓட்டமற்ற ஓவர்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா 9 ஓட்டமற்ற (Maiden Overs) ஓவர்களை வீசி முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜொப்ரா ஆர்ச்சர் (08), அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் (06), இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (06) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

ThePapare Tamil weekly sports roundup – Episode 85

முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு….

இதேநேரம், இங்கிலாந்தின் ஜொப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 338 டொட் பந்துகளை வீசினார். இதில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் 232 பந்துகளையும், நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 320 பந்துகளையும் வீசியுள்ளனர்.  

ஸ்டம்பிங்

இம்முறை உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் டொம் லதம் அதிகபட்சமாக 21 விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருந்தார். அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி (20), மேற்கிந்திய தீவுகளின் ஷாய் ஹோப் (16) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  

பிடியெடுப்பு

இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், 13 பிடியெடுப்புகளை எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்கா அணித் தவைர் பாப் டு பிளெசிஸ் 10 பிடியெடுப்புகளை எடுத்திருந்தார்.