BPL தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ள பிரபல வீரர்கள்

939

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் மற்றும் உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஆகியோர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) முறையே டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மஹேல பயிற்றுவிக்கும் அணியில் ஷேன் வொட்சன்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ….

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் விதிமுறைப்படி, வீரர்கள் வரைவில் இடம்பெறாத 2 வெளிநாட்டு வீரர்களை அணிகள் நேரடியாக தங்களது அணிகளில் ஒப்பந்தத்தின் மூலம் இணைத்துக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில் குறித்த இரண்டு வீரர்களையும், டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகள் இணைத்துள்ளன.

உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கிற்கு முதன்முறை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் இங்கிலாந்து அணியுடன், பங்களாதேஷ் தொடருக்காக செல்ல மறுத்திருந்தனர். இந்த நிலையில், அதன் பின்னர் முதலாவது தடவையாக அவர் பங்களாதேஷ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இயன் மோர்கன் ஒட்டுமொத்தமாக 268 T20 போட்டிகளில் விளையாடி, 128.25 என்ற ஓட்டவேகத்தில் 5,682 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமாத்திரமின்றி உலகக் கிண்ணத் தொடரிலும் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மோர்கன் இதற்கு அடுத்தப்படியாக யூரோ T20 ஸ்லாம் தொடரிலும் விளையாடவுள்ளார்.

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா ………

மோர்கனுக்கு அடுத்தப்படியாக உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தென்னாபிரிக்காவின் ஜே.பி. டுமினி ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளார். சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி வரும் இவர், இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் இணைக்கப்படவில்லை. 

எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 35.85 என்ற ஓட்ட சராசரியினை கொண்டிருந்தார். இதன் காரணமாகவும், அவரது சுழல் பந்துவீச்சு காரணமாகவும் டுமினி ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். முக்கிய அம்சமாக, அவரும் முதல் தடவையாக பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடவுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் குல்னா டைட்டன்ஸ் அணி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சனை தங்களுடைய அணியில் ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<