இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட், டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு

1114
Image Courtesy - GettyImages

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தொடருக்கான போட்டி அட்டவணை இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் இன்று (06) வெளியிடப்பட்டது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இன்று வரையில் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு பின்னரான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (08) இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. 

தென்னாபிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக குயின்டன் டி கொக் தேர்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அந்த…

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுக்குவந்ததன் பின்னர் நடைபெறவுள்ள அடுத்த எதிர்பார்ப்புமிக்க சர்வதேச கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் நடைபெறவுள்ளது. 

குறித்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது. குறித்த தொடரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தான் அணி கடந்த 28ஆம் திகதி இங்கிலாந்தை சென்றடைந்தது. இருந்தாலும் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பயணமானது. 

இதில் குறித்த இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்ட டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாமில் 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக 20 வீரர்கள் முதலில் இங்கிலாந்து சென்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சார்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதன் பின்னர் குறித்த 10 வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 6 வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து மீண்டனர். அதன் பின்னர் குறித்த 6 வீரர்களும் இங்கிலாந்து சென்றனர். 

இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள்

டெஸ்ட் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ள அசார் அலி தலைமையிலான 20 வீரர்களைக் கொண்ட…

இந்நிலையில் இன்று (06) இங்கிலாந்து கிரிக்கெட் சபை 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன் அடிப்படையில் குறித்த டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தொடர்கள் இங்கிலாந்தின் இரு மைதானங்களில் மாத்திரம் நடைபெறவுள்ளன. 

குறித்த இரு தொடர்களையும் நிறைவு செய்கின்ற பாகிஸ்தான் அணி செப்டம்பர் 2ஆம் திகதி இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தானின் லாஹூர் நோக்கி திரும்பவுள்ளது. 

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை

5-9 ஆகஸ்ட் – முதலாவது டெஸ்ட் போட்டி – ஓல்ட் ட்ரப்பெட் 

13-17 ஆகஸ்ட் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – த ஏஜஸ் போல் 

21-25 ஆகஸ்ட் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – த ஏஜஸ் போல்

28 ஆகஸ்ட் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஓல்ட் ட்ரப்பெட் (இரவு)

30 ஆகஸ்ட் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ஓல்ட் ட்ரப்பெட் (பகல்)

1 செப்டம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஓல்ட் ட்ரப்பெட் (இரவு)

இதேவேளை பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி குறித்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பின்னரும் அயர்லாந்து அணியுடன் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. 

குறித்த அயர்லாந்து அணியுடனான தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவிவந்த நிலையில் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் குறித்த தொடர் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டதுடன் தொடர் அட்டவணையும் வெளியிடப்பட்டது. 

அந்த வகையில் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அயர்லாந்து அணி எதிர்வரும் 18ஆம் திகதி இங்கிலாந்து புறப்படவுள்ளது. தொடரை நிறைவுசெய்யும் அயர்லாந்து அணி ஆகஸ்ட் 5ஆம் திகதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளது.  

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை. (அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.)

30 ஜூலை – முதலாவது போட்டி – த ஏஜஸ் போல்

1 ஆகஸ்ட் – இரண்டாவது போட்டி – த ஏஜஸ் போல்

4 ஆகஸ்ட் – மூன்றாவது போட்டி – த ஏஜஸ் போல்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க