இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் மாற்றங்கள்

192

இலங்கை டெஸ்ட் அணியில் காணப்பட்ட மேலும் மூன்று வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் சுழற்பந்துவீச்சுத்துறைக்கு பலம் சேர்க்கும் ஜயசூரிய

நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இலங்கை டெஸ்ட் அணி வீர்ரகளான தனன்ஞய டி சில்வா, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக தற்போது இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதேநேரம் தொற்று ஏற்பட்ட மூன்று வீரர்களும் ஹோட்டலில்  தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் மூன்று வீரர்களுக்கும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

மறுமுனையில் ஏற்கனவே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகன் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CPL தொடரில் விளையாடவுள்ள வனிந்து ஹஸரங்க!

இதேவேளை இலங்கை டெஸ்ட் அணியினைப் பலப்படுத்தும் நோக்கில், நேற்று (06) பிரபாத் ஜயசூரிய இலங்கை டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<