டெஸ்ட் போட்டிகளில் நாணய சுழற்சியை கைவிடுவதற்கு ஐ.சி.சி தீர்மானம்

890

141 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடைப்பிடித்து வந்த பாரம்பரியமிக்க நாணய சுழற்சியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கைவிடுவதா என்பது குறித்து பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து எதிர்வரும் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் மும்பையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூரண உடல் தகுதியை நிரூபித்துள்ள மெதிவ்ஸ், லக்மால்

அண்மைக்காலமாக கிரிக்கெட்டில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஐ.சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் 2021 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெறவுள்ள ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பின்ஷிப் தொடருக்கான முதல் மாற்றமாக நாணய சுழற்சியை கைவிடுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடருடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் ஆரம்பமாகவுள்ளது. எனவே அந்த தொடரிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் நாணய சுழற்சி முறைமையைக் கைவிடுவதற்கு ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாக க்ரிக் இன்போ (cricinfo) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் துடுப்பெடுத்தாடுவது அல்லது களத்தடுப்பில் ஈடுபடுவது என்பதை தீர்மானிப்பதற்கு நாணய சுழற்சி முறை இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே 1877ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண டெஸ்ட் போட்டியிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதில் போட்டிகளை நடாத்துகின்ற உள்ளுர் அணிகள் வெற்றிபெறும் நோக்கில் ஆடுகளகத்தை தமக்கு சாதகமாக அமைத்து வருகின்ற காரணத்தால் எதிரணியின் கைகள் கட்டப்படுகின்றன, இதனால் ஒரு தலைப்பட்சமான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று ஒரு தலைப்பட்சமான முடிவுகள் ஏற்படுகின்றன என்று குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதாவது உள்ளுர் அணிகள் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக் கொள்வதால் எதிரணிகள் வேறு வழியின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் நாணய சுழற்சி முடிவுக்கு அந்த அணிகள் கட்டுப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் ஆடுகளத்தின் சாதகமான நிலைமைகள் ஒரு அணியின் பக்கம் செல்கிறது.

உலக பதினொருவர் அணிக்காக சஹீட் அப்ரிடி விளையாடுவதில் சந்தேகம்

எனவே, இதற்கு முடிவுகட்டும் நோக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய நாணய சுழற்சி முறை குறித்து பரிசீலிக்க ஐ.சி.சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, நாணய சுழற்சி முறையை கைவிட்டு உள்ளுர் அணி அல்லாமல் பயணம் மேற்கொண்ட எதிரணி தலைவர்கள் நேரடியாகவே பந்துவீச்சை அல்லது துடுப்பாட்டத்தை தீர்மானிக்கின்ற உரிமையை வழங்குகின்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய ஐ.சி.சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இது குறித்து 28 ஆம், 29 ஆம் திகதிகளில் மும்பையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் வரும் போட்டிகளிலிருந்து நடைமுறைப்படுத்தவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் அனில் கும்ப்ளே, அன்ட்ரு ஸ்டோர்ஸ், மஹேல ஜயவர்தன, ராகுல் ட்ராவிட், டிம் மே, நியூஸிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ஓயிட், ஐ.சி.சியின் நடுவர் ரிச்சர்ட், ஐ.சி.சியின் போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை வரலாற்றில் மிகப்பெரிய இலாப பதிவு

எனினும், இந்த யோசனையை பரிந்துரை செய்தவர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டேரன் லீமன். ஆனால் தற்போது அவர் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதால் எதிர்வரும் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் மும்பையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த யோசனைக்கு ரிக்கி பொண்டிங், மைக்கல் ஹோல்டிங், இயன் போத்தம், ஷேன் வோர்ன் ஆகியோரும் வரவேற்பினை வழங்கியிருந்தனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…